Monday, May 16, 2011

10 Tips for Better Health

We are constantly bombarded with mixed messages. Don't eat carbs. Eat good carbs, not bad carbs, huh? Mediterranean versus South Beach versus Sheboygan? 30 minutes twice a week versus 90 minutes a day. No wonder we are confused. Want to be healthier?, then listen to your mother.
Here are 10 tips she taught us that actually are good for you. Mother knows best.
1. "Eat it, it's good for you." - Listen to your mother and eat breakfast every morning. People who eat breakfast regularly are 5 times less likely to put on weight.

2. "How do you know you don't like it, if you haven't tasted it?" - Remember to add fish to your diet. The omega 3's found in cold water fish can cut your risk of heart disease and decrease symptoms of depression.

3. "I can't believe you can sleep in this filth!" - Get plenty of rest. People who sleep less than 7 hours a night on average are 2 1/2 times more likely to die prematurely.

4. "You can say just about anything about anyone, as long as you "bless their heart" somewhere in the sentence." -Remembering those social skills come in handy when meeting new friends. Elderly people who are more involved in communal activities live longer and have less medical problems.

5. "If you're going kill each other, do it outside" - Get outdoors and experience nature. It raises brain serotonin (the feel-good hormone). It's easy, start with a daily walk.

6. "Don't put that in your mouth, you don't know where it's been." - Brush your teeth and floss already. Studies have shown that practicing good dental hygiene can add 6.4 years to your life.

7. "You WILL eat it, and you WILL like it!" - Eat your vegetables, your mother was right, again - bless her soul(or heart!). Fruits and vegetables are chock full of good things - fiber, antioxidants, vitamins and minerals. Remember fiber keeps things moving.

8. "Why didn't you go before we left the house?"- Another of life's mysteries. Remember peeing is good, so drink lots of water. For every ounce of coffee or soda pop you consume, 1/2 ounce of water is siphoned from your tissues.

9. "Why? Because I said so, that's why!" - Need to think about the logic of that one? Maybe a little meditation is in order. Take time for quiet reflection and prayer-- it is shown to reduce stress and lower blood pressure.

10. "A little soap & water never killed anybody." - Wash your hands. Yup, we are channeling mom, again. By frequently washing your hands you wash away germs that you have picked up from other people, or from contaminated surfaces, or from animals and animal waste. One of the most common ways people catch colds is by rubbing their nose or their eyes after their hands have been contaminated with the cold virus.
Basically, it boils down to listening to your mother. See she really was looking out for your best interest. Now, if we could only figure out how she always knew when we were making that face.

"Someday your face will freeze like that . . ."

Monday, May 9, 2011

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள்!







1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:


நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.


நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கேபரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமதுசிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாகவிமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும்என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில்
அதிகப்படியாகமூக்கை நுழைக்கிறோம். இத்தகைய சிந்தனை தனித்துவத்தின்
இருப்பைநிராகரிக்கின்றது. இதன் பயன், இறைவனின் இருப்பை மறைமுகமாக
நிராகரிக்கிறது.ஏனெனில், இறைவன் ஒவ்வொருவரையும் அவரவருக்கான
தனித்துவம்-தனித்தன்மையுடனேபடைத்துள்ளார்.

மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல்செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது.எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் இறைவன் அவரவரின் வழியிலேயே செல்லதூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம்உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!

2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!

மனஅமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது
நம்மைநோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீதுதவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம்மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம். இதுதூக்கமின்மை, வயிற்று அல்சர்
மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாககாரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறைநிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால்மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.

இந்தத் தவறான பழக்கத்துக்குமுடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறியவிஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பைவளப்படுத்திக் கொள்வோம்.

3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!

இவ்வுலகம்முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின்
சொந்தத்தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர்.அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் -
அவர்களுக்குத் தேவையானதைக்கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகுசீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின்சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்கஆரம்பிப்பார்கள்.


இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சிசெய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடுவிளைவிப்பதை விட பெறுமதியானதல்ல!


நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள்வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.

4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை)கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம்அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி
செய்பவரை விடநீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியஉங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில்துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம்.

இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காகநீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா?
கூடாது!
நினைவில்கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும்என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்கமுடியாது.


நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறுஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப்பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களைஎங்குமே கொண்டு சேர்க்காது; அது
உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!

5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள்சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள்
தான்தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத்தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமானமாற்றத்தையும் இனிமையான
உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.

6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இதுதீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம்கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும்விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்தமுடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வதுஎவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாகசகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கைவையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.

7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்தமுக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடிநம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக்கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது.

உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான
கவலைகளைஅளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?
உங்களின்புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள்.

உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக்
கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம்செலவழியுங்கள்.
இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள்குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.

8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் - உள்மன ஆய்வு - மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும்எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர்நிலையாகும்.

தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள்.தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்யமுடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து
மூன்றரை மணி நேரத்துக்குஅமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவுஅடையாது.


சிறிது சிறிதாக தியானம் செய்வதன்அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்குமாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில்நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.

9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமானமனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும்
வெற்றிடமானமனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும்பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள்.

சுறுசுறுப்பாக உங்கள்பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவதுசெய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிகபெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள்மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும்நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் இறைவனின் பெயரை உளப்பூர்வமாககண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.

10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

"இதுஎன்னால் முடியுமா? முடியாதா?" என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி
நேரத்தைவீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழுஅளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதைஉங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள்நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல்உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவதுவிஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறைநீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலைகொண்டிருப்பது எதற்கும் பயன் தராது - மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர.உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதைநினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோஅது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்குஏன் அழ வேண்டும்?

Sunday, May 8, 2011

பெண்கள் முகத்தை அந்நிய ஆடவரை விட்டும் மறைத்துக் கொள்வதில் பேணுதல்!!




''நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களின் மனைவியர்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறும்!'' (அல்குர்ஆன்: 33:59)

''நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் இஹ்ராம் அணிந்த நிலையில் இருக்கும்போது வாகனக் கூட்டம் ஒன்று எங்களைக் கடந்து செல்லும். எங்களுக்கு நேரே அவர்கள் வரும்போது எங்களில் உள்ள பெண்கள் தங்கள் தலையில் தொங்கிக் கொண்டிருக்கும் துணியால் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். வாகனக் கூட்டம் எங்களைக் கடந்து சென்றதும் எங்கள் முகத்தைத் திறந்து கொள்வோம்'' என ஆயிஷா(ரழி) அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மத், அபூதாவூத்)

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது,
தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)


سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்’
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Friday, April 29, 2011

செய்தித் துளிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
1. முறையாக தூங்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள், சுறுசுறுப்பாக செயல்படுவர் என, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிந்தது.அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, "ஸ்ரீ இன்டர்நேஷ்னல்' என்ற நிறுவனம், பிறந்த குழந்தைகளுக்கான ஆய்வில் ஈடுபட்டது. இந்நிறுவனம், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், முறையாக தூங்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது.ஆய்வின் தலைவர் எரிகா டெய்லர் கூறியதாவது:ஒன்பது மாத குழந்தைகள் முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள், இந்த ஆய்விற்கு தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் நடவடிக்கைகள், தூங்கும் விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.தினமும் இரவு சீக்கிரமே தூங்கும் குழந்தைகள், நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாக புரிந்து கொள்கின்றன. மொழிகளை விரைவாகவும் கற்று கொள்கின்றனர். அவர்கள், கணித பாடத்தில் நன்றாக செயல்படுவதாகவும் கண்டறிந்தோம்.அதேநேரம், குறைவாக தூங்கும் குழந்தைகள் சுறுசுறுப்பின்றி செயல்படுகின்றன. குழந்தைகள் தூங்குவதற்கு முன் கதைகள் சொல்வது, அவர்களுடன் உரையாடுவது உள்ளிட்டவைகள், அவர்களை தூங்க வைப்பதற்கு பயனுள்ளதாக அமையும்.


2. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு பதிந்து கொள்ளுங்கள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் தனி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை வேலை வாய்ப்பிற்கு அந்தந்த பள்ளிகளியே பதிந்து கொள்ளலாம். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி பள்ளி மாணவர்கள் இதுவரை பதியாதவர்கள் பதிவு செய்ய வேண்டும் தமிழகத்தில் உள்ள தனியார், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவு செய்வார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் பெயரை வேலை வாய்ப் பிற்கு பதியுமாறு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும். மேலும் 10ம் வகுப்பில் வேலை வாய்ப் பிற்கு பதிந்தவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பள்ளி முதல் வரிடம் வழங்க வேண்டும்.

3. புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம்' என்று மாணவியரும், "தங்களது மகள்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களை, திருமணம் செய்து வைக்க மாட்டோம்' என பெற்றோரும் உறுதி எடுத்து கொண்டனர். இதே போல் தமிழக மாணவிகளும், பெற்றோர்களும்உறுதி எடுக்க வேண்டும்.கேரள மாநிலம் கண்ணூரில், கண்ணூர் மலபார் புற்றுநோய் தடுப்பு மையத்தில், புகையிலை எதிர்ப்பு தினவிழா நடந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, திரளான மாணவியரும், அவர்களது பெற்றோரும், கலந்து கொண்டனர். புகைபிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானர்களையோ, திருமணம் செய்து கொள்ள மாட்டோமென மாணவியரும், போதைக்கு அடிமையானவர்களுக்கு, தங்கள் மகள்களை, திருமணம் செய்து கொடுக்க மாட்டோமென, பெற்றோரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.கேரள மாநிலத்தில் தான் சிகரெட், பீடி போன்றவை அதிகளவு விற்பனையாகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.


4. சர்க்கரை நோயாளிகளுக்கு வலியின்றி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும்'' என சர்க்கரை நோய் நிபுணர் தெரிவிக்கிறார்கள். தர்மகிருஷ்ணமராஜா பேசியதாவது: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்புகளால் மாரடைப்பு வந்தாலும் வலி தெரியாது. வலி இல்லாததால் சிகிச்சைக்கு உடனடியாக வராமல் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. 75 சதவீத சர்க்கரை நோயாளிகளின் உயிரிழப்புக்கு இருதய பாதிப்புகளே முக்கிய காரணம். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்திருந்தால், பின் விளைவுகளை தடுக்க முடியும். சரியான உணவு முறை, உடற்பயிற்சி, நடைபயிற்சி, முறையான சிகிச்சை உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும், என்றார். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக செய்து, இலவச மருந்து, சத்துணவு வழங்கப்பட்டது.
5. பிளிச்சிங் பவுடர் கண் ணில் விழுந்ததால் தொழிலாளியின் கண் பார்வை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் 900 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் முருகன். இவர், உப்பார்பட்டி ஊராட்சி குடிநீர் தொட்டியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வந்தார். குடிநீரில் பிளிச்சிங் பவுடர் கலந்து குளோரினேசன் செய்வதற்காக பிளிச்சிங் பவுடர் மூடையை திறந் தார். அப்போது பிளிச்சிங் பவுடர் அவரது இரண்டு கண்ணிலும் விழுந்தது. உடனடியாக குடிநீர் ஆய்வாளர் முருகானந்தம் அவரை தேனியில் உள்ள கண் ஆஸ்பத்தியில் சேர்த் தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூன்று நாள் கழித்தே பார்வை குறித்து தெரிவிக்க முடியும் என்றனர்.

Monday, April 25, 2011

இஸ்லாமியப் பொதுஅறிவு



1 . ஹிஜ்ரத் என்றால் என்ன?

வாழும் நாட்டில் கொடுமை பொறுக்க முடியாமல் இறைவனுக்காக நாடு துறந்து அன்னிய நாட்டில் தஞ்சம் புகுவது.


2 . இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் ஸஹாபாக்கள் எந்தநாட்டில் தஞ்சம் புகுந்தார்கள்?

ஹபஸா (அபிசீனியா)


3 . ஹிஜ்ரா காலண்டர் எப்படி தொடங்கியது?

முஹம்மத்நபி(ஸல்)அவர்கள் மக்கா நகர் துறந்து, மதீனா நகர் நோக்கி ஹிஜ்ரத் சென்ற நிகழ்விலிருந்து.


4 . ஹிஜிரி (அரபி) மாதங்கள் பெயர் என்ன?

1. முதல் மாதம் முஹர்ரம்,

2. இரண்டாம் மாதம் ஸபர்,

3. முன்றாம் மாதம் ரபிவுல் அவ்வல்,

4, நான்காம் மாதம் ரபிவுல் ஆகிர்,

5, ஐந்தாம் மாதம் ஜமாஅத்துல் அவ்வல்,

6. ஆறாம் மாதம் ஜமாஅத்துல் ஆகிர்,

7. ஏழாம் மாதம் ரஜப்,

8. எட்டாம் மாதம் ஷாஃபான்,

9. ஒன்பதாம் மாதம் ரமழான்,

10. பத்தாம் மாதம் ஷவ்வால்,

11. பதினோன்றாம் மாதம் துல் கஅதா,

12. பனிரெண்டாம் மாதம் துல் ஹஜ்.


5. முஸ்லிம்களின் 3 புனித நகரங்கள் எவை?

1. புனித கஃபா ஆலயம் உள்ள மக்கா.

2. மஸ்ஜித் நபவீ இருக்கும் மதீனா.

3. மஸ்ஜித் அக்ஸா இருக்கும் பாலஸ்தீனம்.


6. உம்முல் குர்ஆன் எது?

ஸூறத்துல் ஃபாத்திஹா(ஏழு வசனங்கள்)


7. ரூஹூல் அமீன் என்பது யாருடைய பெயர்?

வானவர் தலைவர் ஜீப்ரீல் (அலை) அவர்களுடைய பெயர்


8. நபி(ஸல்) அவர்களுக்கு குர்ஆன் எத்தனை ஆண்டுகள் வஹீ மூலம் இறங்கியது?

23 ஆண்டுகள்


9. குர்ஆன் மக்காவில் எத்தனை ஆண்டுகள், மதீனாவில் ஆண்டுகள் இறங்கியது?

மக்காவில் : 13 ஆண்டுகள் , மதீனாவில் : 10 ஆண்டுகள்


10 . குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு எத்தனை நன்மைகள் உண்டு?குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் உண்டு. (ரமழானில் 70-நன்மைகள்-).


11. திருக்குர்ஆனை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவர் யார் ?அப்துல்ஹமீது பாகவி


12. ஸஜ்தா இல்லாத தொழுகை யாது?

ஜனாஸா தொழுகை


13. ஆரம்பத்தில் திருக்குர் ஆனை எதில் பதிவு செய்தனர் ?

எலும்பு, தோல், மரப்பட்டைகள். மேலும் நபிகளாரும், ஸஹாபாப் பெருமக்களும் மனனம் செய்து கொண்டனர்.


14 . திருக்குர்ஆனின் முதல் வசனம் எது ?

'இக்ரஹ் பிஸ்மிரப்பிக்கல்லதி ஹலக்' (அல் குர்ஆன் 96 : 1)


15. நபி (ஸல் ) அவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது இறங்கிய இறை வசனம் எது?

'அல்யவ்ம அக்மல்து லகும் தீனகும் வ அத்மம்து' என துவங்கும் வசனமாகும்(5:3)


16. உலகின் இறுதி நபி யார் ?

உலகின் இறுதிநபி முஹம்மத்(ஸல்) அவர்கள்


17. மைக்கேல் ஹார்ட் எழுதிய The 100 என்ற ஆய்வு நூலில், எல்லாருக்கும் முதன்மையாக, தேர்வு செய்யப்பட்டுள்ளவர் யார் ?

முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.


18. குர் ஆனில் அதிகம் பெயர் கூறப்பட்ட நபி யார் ?

நபி முஸா (அலை)


19. இறுதி நாளின் அடையாளமாக, வானிலிருந்து இறங்கிவரக்கூடிய நபி யார் ?

நபி ஈஸா (அலை)


20. திருக் குர் ஆனில் பெயர் கூறப் பட்ட ஒரே பெண்மணி யார் ?

நபி ஈஸா(அலை) அவர்களின் தாய் மரியம் (அலை).


21. திருக் குர் ஆனில் ஒரு இடத்தில் மட்டும் வரும் நபித் தோழரின் பெயர் என்ன ?

ஜைது (ரலி) ( அல் குர்ஆன் 33 : 37)


22. ஹதீஸ் கிரந்தங்கள் சிலவற்றின் பெயர் கூறு?

புஹாரி, முஸ்லிம், இப்னுமாஜா, திர்மிதி, முஸ்னத் அஹ்மத், நஸயீ


23. எந்த கலீஃபாவின் ஆட்சியில், ஸ்பெயினில் இஸ்லாம் பரவியது?

கலிபா உஸ்மான் (ரலி)


24. பிலால்(ரலி) அவர்களை அடிமைத் தனத்திலிருந்துமீட்டவர் யார் ?

அபு பக்கர் (ரலி) அவர்கள்


25. முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?

அலி (ரலி) அவர்கள்.


26. இஸ்லாமிய வரலாற்றில் முதல் பெண் உயிர் தியாகியின் பெயர் என்ன ?அன்னை சுமையா (ரலி) அவர்கள்.


27. இறைவனின் வாள் என்று அழைக்கப் பட்ட நபித்தொழர் யார் ?

காலித் பின் வலீத்(ரலி)


28. தாங்கள் வழி நடத்திச் சென்ற அனைத்து போர்களிலும், வெற்றி ஈட்டிய நபித் தொழர் யார் ?

காலித் பின் வலீத் (ரலி)


29. வியாபாரிகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேள்விப் பட்டு இஸ்லாத்தை ஏற்ற கேரள மன்னர் யார் ?

மன்னர் சேரமான் பெருமாள்-அப்துர் ரஹ்மான்


30. நாம் பிறந்து வளர்ந்து மடியும் எல்லா விஷயங்களும் எழுதப்பட்டு வானில் உள்ள மூலப்பதிவேட்டின் பெயர் என்ன ?

லவ்ஹூல் மஹ்ஃபுள்


31. மனிதனின் வலப்புறமும், இடப்புறமும் இருந்து நன்மை, தீமைகளை எடுத் தெழுதும் வானவர்கள் பெயர் என்ன ?

கிராமன் - காத்திபீன்


32. ஒரு நற்செயலை செய்தால் எத்தனை மடங்கு நன்மைஉண்டு ?

10 மடங்கு நன்மை உண்டு.


33. மறுமையில் ஒரு நாளின் அளவு என்ன ?

உலகின் ஆயிரம் ஆண்டுகள் (காண்க அல்குர்ஆன் 22 : 47)


34. அல்லாஹ் - அளவற்ற அருளாளன்


35. திருக்குர்ஆன் - இறைவேதம்


36. குர்ஆனின் முதல் வசனம் இறங்கிய இடம்?

ஹிரா குகை


37 அல்லாஹ்வுவை வணங்குவதற்காகமுதலில் ஆதம் (அலை)அவர்களால் கட்டப்பட்டு பிறகு இப்ராஹீம் (அலை)அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பள்ளிவாயில் யாது ?

மக்காவிலுள்ள கஃபா


38. கலிபா என்பவர் யார்?

இஸ்லாமிய ஆட்சியாளர்


39. ஸஹாபாக்கள் எனப்படுவோர் யாவர்?

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள்


40. ஈத் அல் பித்ர் என்றால் என்ன?

புனித ரமழான் மதத்தின் இறுதியில் வரும் பெருநாள்


41. ஈத் அல் அத்ஹா என்றால் என்ன?

தியாகத்திருநாள் - ஹஜ்ஜூப் பெருநாள்


42. சுன்னா என்றால் என்ன?

நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறை சொல், செயல், அங்கிகாரங்களுக்கு சுன்னா எனப்படும்.


43. ஸலாத் என்றால் என்ன?

தொழுகை


44. ஸஜ்தா என்றால் என்ன?

தொழும் போது தலையை குனிந்து நெற்றியை பதிக்கும் முறை


45. சூரா என்றால் என்ன?

குர்ஆனின் பாகம்


46. ஷிர்க் என்றால் என்ன?

அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்


47. ஸவ்ம் என்றால் என்ன?

நோன்பு


48. வித்ர் என்றால் என்ன?

இரவில் தூங்குவதற்கு முன் இறுதியாகத் தொழும் தொழுகை


49. வுளு என்றால் என்ன?

தொழுகைக்கு முன் நீரால் முகாம் கை கால் போன்ற உடல் உறுப்புகளை சுத்தம் செய்வது


50. தக்வா என்றால் என்ன?

இறையச்சம்


51. தவ்பா என்றால் என்ன?

பாவ மன்னிப்பு


52. புர்கான் என்றால் என்ன?

திருக்குர்ஆனின் மற்றுமொரு பெயர் - பிரித்தரிவித்தல் என்று பொருள்.


53. தீன் என்றால் என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம்


54. தூஆ என்றால் என்ன?

இறைவனிடம் உதவி கேட்டு பிராத்தனை புரிவது


55. பாங்கு என்றால் என்ன?

தொழுகைக்கான அழைப்பு

Saturday, April 23, 2011

மனித ஆன்மாவின் பயணத்தொடர்....‏

மிக மிக முக்கியமான கட்டுரை
ஆலிஃப் அலி




ஒரு விஷயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும் உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது. ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம் கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்து மனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனித ஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.





இறைவனின் படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில் எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்சம் மனித உடலில் காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம் கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.





அரபு மொழியில் நஃப்ஸ், ரூஹ் என்ற பதங்களில் இது அழைக்கப்படுகின்றது. ஆன்மா வல்ல நாயன் அல்லாஹ்விடமிருந்துதான் மனிதனில் ஊதப்பட்டது. அதனை அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில கூறுகின்றான்.
﴾அவன் மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியை உண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான்﴿. (அல்குர்ஆன் 32:7,8,9)





இதுபோன்ற வசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (அல்குர்ஆன் 15:29/ 38:72/ 66:12/ 21:91)





உயிரும் ஆன்மாவும் ஒன்றானவையல்ல. இரண்டும் வெவ்வேறு அம்சங்களே!
இதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஒரு ஹதீஸிலிருந்து விழங்க முடியும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். "ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்." (முஸ்லிம்)





இந்த ஹதீஸின் பிரகாரம் ஒரு ஆன்மா நான்கு மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே ஒரு சிசுவில் ஊதப்படுகின்றது. அவ்வாறெனில் அதற்கு முன்பே அச்சிசு படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. எப்பொருளும் உயிரின்றி வளர்ச்சியடையாது. வளர்ச்சியெய்தும் எப்பொருளுக்கும் உயிரிருக்கும். அப்படியானால் உயிரிருக்கின்ற படியால் தான் சிசு வளர்ச்சியடைகின்றது. அதற்கடுத்தபடியாக வேறு ஏதோவொன்று (ஆன்மா) உடலில் சேர்க்கப்படுகின்றது. மரங்கள் வளர்கின்றன அவற்றுக்கு உயிருண்டு ஆனால் ஆன்மா இல்லை. இதன்மூலம் உயிரும் ஆன்மாவும் வெவ்வேறு அம்ஷங்கள் என்பதை விளங்கலாம்.





மனிதன் என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு முன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும் "ஆன்மா (ரூஹ்)" என்றே குறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான் வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வை அடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம் கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறு கட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.





இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம்.




முதல் கட்டம் :




முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை) ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இறுதி மனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்.





"நபியே உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களது சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான் உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்..." (அல்குர்ஆன் - அல்அஃராப்:172)





அவ்வான்மாக்கள் இருக்குமிடம் "ஆலமுல் அர்வாஹ்" (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது. இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மா தங்கியிருக்கும் காலமோ மிக நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தை பிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்ததிலிருந்து தாயின் கருவறையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள் ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது.





இரண்டாம் கட்டம் :
ஆன்மா இரண்டாம் கட்டமாக தாயின் கருவறையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.





"ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போது அதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில் அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்." (நூல்: முஸ்லிம்)





மூன்றாம் கட்டம் :
தாயின் கருவறையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கிய இடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோ அந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம் ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய இடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப் பின்பற்றி வாழ்ந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும். மாறாக அவற்;றைப் புறக்கணித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும்.





இவ்வுலக வாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இரு பாதைகளில் ஏதாவது ஒரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டு பாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். "(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்." (அல்குர்ஆன் - அல்பலத்:10) மற்றும் ஸூரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில் "நிச்சயமாக, நாம் அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப் பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்." என்று கூறுகின்றான்.





இவ்விரு பாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்ட வரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத் தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில் வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான் அல்லாஹ் தனது கட்டளைகளின் பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில் மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்று கூறுகின்றான்.





"இம்மை மறுமையின் விளைநிலம்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கிணங்க; மறுமைக்கான கட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்து கொள்ளவேண்டும். உலகம் எனும் இத்தேர்வுக் களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் மறுமையில் சிறந்த பேறுகிடைக்கும்.





ஆன்மாவின் பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனைய காலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்" (நூல்: திர்மிதி)





இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும் அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகிய காலம்தான். எனினும் மனிதன் இங்குதான் தவறிழைக்கின்றான். இறைவனது அருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான். ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனது பார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர் இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன் மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான்.





நான்காம் கட்டம் :
உடலைவிட்டுப் பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பது மரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மா நல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால் ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும்.





இங்கும் ஆன்மாக்கள் நீண்டகாலம் தங்கியிருக்கும். எவ்வாறெனில் ஆலமுல் அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து, பின்பு பூமியை அடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரை ஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில் தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள் வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.





ஐந்தாம் கட்டம் :
ஆலமுல் பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும். பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்பு நாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து பூவுலகில் வாழ்ந்த இறுதி மனிதன்வரை அனைவரும் அங்கு திரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதிய உடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோ அல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ் கூறுகின்றான். "ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும்போது." (அல்குர்ஆன் - அத்தக்வீர்: 07)





இங்கும் ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான் என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இது தொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.





1. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன்.
"நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்." (அல்குர்ஆன் - அல்ஹஜ்: 47)





2. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50, 000 வருடங்களுக்குச் சமன்.
"மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதாயிரம் வருடங்களாகும்." (அல்குர்ஆன் - அல்மஆரிஜ்: 04)





இவ்விரு வசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின் கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காஃபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் இருக்கும் என ஒரு கருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறுகிய அறிவால் சரியாகக் குறித்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காக ஒரு முஸ்லிம் மஹ்ஷர் வெளியில் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அது இப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிட நீண்டதே!





ஆறாங்கட்டம் :
ஆன்மாவின பயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்தனவோ அதற்கு ஏற்றதான வாழ்கையை இங்கு பெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள் புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தை அனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள் மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும் வாழ்க்கைக்கு முடிவே இல்ல
ஆக ஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்த கால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கை அற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக் கொண்டது. ஒன்று இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன் நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும் முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத் தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்:





"எவர் வரம்புமீறிவிட்டாரோ மேலும் இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாரோ நிச்சயமாக நரகம் அதுவே (அவர்) ஒதுங்குமிடமாகும். மேலும் யார் தனது இரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனது உள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தர இன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்" (அல்குர்ஆன் 69:37- 41)





எனவே நாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும். உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. அற்பமும் சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில் மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். "நீங்கள் உலகத்தில் ஓர் அன்னியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல் வாழுங்கள்." (நூல்: புகாரி)





ஆக மனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக் கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம் வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறை வழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதை விளங்கவேண்டும்.




அதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோமநான் தெரிந்து கொண்டதை மற்றவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதை forward செய்கிறேன் . இதில் ஏதும் தவறு இருந்தால் எனக்காக அல்லாஹவிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.