Tuesday, October 26, 2010

தனிமைக் கூடு… படுத்தும் பாடு… (ஓர் உளவியல் பார்வை)


“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”
“பால் குடிச்சாச்சா…. ?”
“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”
“நேரமாச்சும்மா… சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”
“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”
பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார். குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி
ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.
ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.
ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.
“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும்.
ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.
பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும்.
அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும். அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.
நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள். வெறுமைக் கூடு பாதிப்பு (மொழி பெயர்ப்பு சரிதானா சகோ மின்ஹாஜ்) என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !
இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.
வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !
இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?
வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.
ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.
“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !
இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.
“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம்.
இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.
1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.
3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும்.
4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.
5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.
6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.
7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.
8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.
9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.
10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.
11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.
12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.
13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.
14. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.
15. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில்.
16. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.
17. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.
18. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து குர் ஆன் ஹதீஸ்கள் ஓதுவது, மார்க்க விஷயங்களை கற்றுக்கொள்வது.
19. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
20. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.
21. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.
22. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.
23. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.
நன்றி நிதூர் சீஸன் வலைப் புவிலிருந்து..

Saturday, October 23, 2010

Successful Husband tips

1. Dress up for your wife, look clean and smell good. When was the last time us men went shopping for designer pyjamas? Just like the husband wants his wife to look nice for him, she also wants her husband to dress up for her too. Remember that Rasul Allah - sal Allahu alayhi wa sallam - would always start with Miswak when returning home and always loved the sweetest smells.

2. Use the cutest names for your wife. Rasul Allah - sal Allahu alayhi wa sallam - had nicknames for his wives, ones that they loved. Call your wife by the most beloved names to her, and avoid using names that hurt their feelings.

3. Don't treat her like a fly. We never think about a fly in our daily lives until it 'bugs' us. Similarly, a wife will do well all day - which brings no attention from the husband - until she does something to 'bug' him. Don't treat her like this; recognize all the good that she does and focus on that.

4. If you see wrong from your wife, try being silent and do not comment! This is one of the ways Rasul Allah - sal Allahu alayhi wa sallam - used when he would see something inappropriate from his wives - radi Allahu 'anhunn. It's a technique that few Muslim men have mastered.

5. Smile at your wife whenever you see her and embrace her often. Smiling is Sadaqah and your wife is not exempt from the Muslim Ummah. Imagine life with her constantly seeing you smiling. Remember also those Ahadith when Rasul Allah - sal Allahu alayhi wa sallam - would kiss his wife before leaving for Salah, even if he was fasting.

6. Thank her for all that she does for you. Then thank her again! Take for example a dinner at your house. She makes the food, cleans the home, and a dozen other tasks to prepare. And sometimes the only acknowledgement she receives is that there needed to be more salt in the soup. Don't let that be; thank her!

7. Ask her to write down the last ten things you did for her that made her happy. Then go and do them again. It may be hard to recognize what gives your wife pleasure. You don't have to play a guessing game, ask her and work on repeating those times in your life.

8. Don't be little her desires. Comfort her. Sometimes the men may look down upon the requests of their wives. Rasul Allah - sal Allahu alayhi wa sallam set the example for us in an incident when Safiyyah - radi Allahu 'anha - was crying because, as she said, he had put her on a slow camel. He wiped her tears, comforted her, and brought her the camel.

9. Be humorous and Play games with your wife. Look at how Rasul Allah - sal Allahu alayhi wa sallam - would race his wife Aisha - radi Allahu 'anha - in the desert. When was the last time we did something like that?

10. Always remember the words of Allah's Messenger - sal Allahu alayhi wa sallam: "The best of you are those who treat their families the best. And I am the best amongst you to my family." Try to be the best!

In conclusion: Never forget to make Dua to Allah - azza wa jall - to make your marriage successful. And Allah ta'ala knows best !!

Wednesday, October 20, 2010

சிந்தித்க தூண்டும் நகைச்சுவை கலந்த உரையாடல் - அப்படி என்ன வேலை தான் பாப்பீங்க ?

*அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க **?" - **நியாயமான ஒரு கேள்வி** * - *"**ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்** **வாங்கிட்டு**, **பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே**? **அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க **?*
**
*நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.** *
நானும் விவரிக்க ஆரம்பிதேன். - "வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."
*"**அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".** *
"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.
*"**சரி"** * - இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".
இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.
காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?
ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.
*அப்பா : **"**இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"**? *
"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."
*அப்பா : **"**முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு * *MBA **படிக்கணும்**?" *–
*அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.** *
*அப்பா : **“**சரி இவங்க போய் பேசின உடனே **client project **கொடுத்துடுவானா**?” *
“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்”
*அப்பா : **"500 **நாள்ல முடிக்க வேண்டிய வேலைய **50 **நாள்ல எப்படி முடிக்க முடியும்**? **ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே**?" *
"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.
ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
*"**அப்புறம்**?"** - **அப்பா ஆர்வமானார்.** * - "இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம். - *அப்பா : **"CR-**னா**?" * - "Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்." - *அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.** *
அப்பா : *"**இதுக்கு அவன் ஒத்துபானா**?" *- "ஒத்துகிட்டு தான் ஆகணும்.
முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"
*அப்பா : **"**சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க**?"*
"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு." *அப்பா : **"**அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."** *
"அதான் கிடையாது.
இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."
*அப்பா : **"**அப்போ இவருக்கு என்னதான் வேலை**?" – * - *அப்பா குழம்பினார்.** *
"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை." - *"**பாவம்பா"** *
"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."
*அப்பா : **"**எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார**?" *
"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை." - *அப்பா : **"**நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி**?!" *
"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க." - *அப்பா : **"**இத்தனை பேரு இருந்து**, **எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே**?" *
"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."
*அப்பா : **"**அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே**? ** அவங்களுக்கு என்னப்பா வேலை**?"
* "இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.
**
*அப்பா : புடிக்காத மருமக கை பட்டா குத்தம்**, **கால் பட்டா குத்தம்கறது மாதிரி."** "**ஒருத்தன்** **பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா**? **புதுசா தான் இருக்கு. சரி** **இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு** **கொடுத்துடுவீங்கள்ள**?*
"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"
*அப்பா: **"**கிளையன்ட் சும்மாவா விடுவான்**? **ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்**?" *
"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்." - *அப்பா : **"**எப்படி**?" *
"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".
*அப்பா : **"**சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான**?" *
"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."
*"**அப்புறம்**?" *
"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்." - *"**அப்புறம்**?" *
"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."
இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.
*அப்பா : **"**எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுச்சிப்பா."** *

Friday, October 15, 2010

How to make Symbols with a Keyboard


Wondering how someone makes a Heart, Arrow or even a TM trademark symbol with their Keyboard?

All you need to do is Hold down your "ALT" key and press another key on the keyboard to create a symbol. Here is a list of some you can make. Have Fun!


  • Alt + 0153..... ™... trademark symbol
  • Alt + 0169.... ©.... copyright symbol
  • Alt + 0174..... ®... .registered trademark symbol
  • Alt + 0176 ...°....... .degree symbol
  • Alt + 0177 ...± ... .plus-or-minus sign
  • Alt + 0182 ...¶....... paragraph mark
  • Alt + 0190 ...¾...... fraction, three-fourths
  • Alt + 0215 .... ×..... multiplication sign
  • Alt + 0162... ¢...... the cent sign
  • Alt + 0161..... ¡...... upside down exclamation point
  • Alt + 0191..... ¿..... upside down question mark
  • Alt + 1.......... ☺... smiley fsce
  • Alt + 2 ......... ☻... black smiley face
  • Alt + 15........ ☼... sun
  • Alt + 12........ ♀.... female sign
  • Alt + 11....... ♂.... male sign
  • Alt + 6......... ♠..... spade sign
  • Alt + 5.......... ♣.... Club symbol
  • Alt + 3.......... ♥.... Heart
  • Alt + 4.......... ♦..... Diamond
  • Alt + 13........ ♪..... eighth note
  • Alt + 14........ ♫.... beamed eighth note
  • Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
  • Alt + 251...... √..... square root check mark
  • Alt + 8236..... ∞.... infinity
  • Alt + 24........ ↑..... up arrow
  • Alt + 25........ ↓..... down arrow
  • Alt + 26........ →... right pointing arrow
  • Alt + 27........ ←... left arrow
  • Alt + 18........ ↕..... up/down arrow
  • Alt + 29........ ↔... left right arrow

Monday, October 11, 2010

உலகை ஏமாற்றிய அமெரிக்கா



வாஷிங்டன்,செப்.12: உலக வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார்.

கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார்.

உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.

செய்தி: தேஜஸ் மலையாள நாளிதழ்

Friday, October 8, 2010

ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!



1. இந்த வருட ஹஜ், குளிர் கால துவக்கத்தில் துவங்குகின்றது. இத்துவக்கம் சாதாரணமாக ஃபுளூ காய்ச்சல் துவங்கும் நாட்களாகும். இது சவுதி அரேபியாவில் துவங்கி விட்டதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பன்றிக்காய்ச்சலும் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகம். ஆதலால் ஹாஜிகள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பழங்களும் பானங்களும் சூடான சூப் மற்றும் வைட்டமின் சி யைத் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது டிஸ்ஸூ பேப்பர் மூலம் வாயையும் மூக்கையும் பொத்தவும். கைக்குட்டையை அடிக்கடி கழுவுதல் நலம். கை கொடுத்தல், கட்டித் தழுவுதல் மற்றும் முத்தம் கொடுத்தலை தவிர்க்கவும். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்கவும். வெளியே செல்லும் போது முகமூடி(மாஸ்க்) அணியுங்கள். காய்ச்சலோ தொண்டை வலியோ இருந்தால் அறைக்குள்ளேயே இருந்து மருந்து உட்கொள்ளுங்கள். அது நோய் அதிகமாவதையும் அடுத்தவருக்கு பரவுவதையும் தடுக்கும். காய்ச்சல் அதிகமானாலோ மூன்று நாட்களுக்கு பின்னரும் தொடர்ந்தாலோ உதட்டில் நிற வித்தியாசத்தை கண்டாலோ உடனடியாக மருத்துவரை காண்பிப்பது நலம்.

2. மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் ஆரோக்கியம் இருப்பவர் ஹஜ் செய்வது நல்லது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புகள் அதிகம். தவாஃப், சயீ கடமைகளை நிறைவேற்றும் போது அதிகமாக நடக்க வேண்டும். ஊரிலிருக்கும் நிறைய ஹாஜிகள் அதிகமாக நடப்பதில்லை. எனவே புறப்படுவதற்கு முன் அதிகமாக நடப்பதை பழக்கமாக்கிக் கொண்டு உடல்ரீதியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு ஏதேனும் நோய் தென்பட்டால் நன்றாக ஓய்வெடுத்து அந்நோய் பூரணமாக குணமான பின்னரே வெளியே இறங்க வேண்டும். வெளியே செல்வதால் நோய் அதிகமாகிவிட்டால் ஹஜ்ஜின் முக்கிய விஷயங்களை செய்யமுடியாமல் 5 நாட்கள் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிடும். உடலில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே ஹாஜிகள் உம்ராவும் ஹஜ்ஜூம் செய்ய வேண்டும்.

3. பணம், டிக்கெட், மருந்துகள் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பேக்கில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வௌ;வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

4. ஹாஜிகள் எப்பொழுதும் தங்களுடைய முஅல்லிம் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது.

5. புனித ஹரமில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொழுவதற்காக தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. எனவே தம்பதிகள் ஹஜ்ஜூக்கு செல்லும் போது ஹரமில் தொழுதுவிட்டு மீண்டும் சந்திக்க, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பார்த்து வைப்பது சிறந்தது. ஹரமிற்கு பல வாசல்களும் அவற்றிற்கு எண்களும் அதில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றில் ஏதாவதொன்றை அடையாளமாக்கிக் கொள்ளலாம். வழி மாறி சென்றுவிட்டால் ஹரமிற்கு வெளியே முக்கிய இடங்களில் சேவை செய்து கொண்டிருக்கும் இந்தியன் ஹஜ்ஜூ மிஷன் பணியாளர்களிடம் உதவி கோரலாம். இந்தியா என எழுதப்பட்ட ஜாக்கெட்(சட்டை) அணிந்த அவர்கள் உங்களுடைய தங்குமிடத்திற்கு வழி சொல்வர்.

6. இந்த வருடம் ஹாஜிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் புனித இடங்களில் தங்குகின்றனர். இம்மாதம் அதிகமாக குளிரக்கூடிய மாதங்களாகும். குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஜாக்கெட், குளிர் தொப்பி மற்றும் கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டியதுவரும். இரு புனித ஆலயங்களுடைய தரைப்பகுதியில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ளதால் ஜில்லென்றிருக்கும். எனவே தொழுகை, தவாஃப் மற்றும் உம்ராவிற்கு செல்லும் போது காலில் சாக்ஸ் அணிந்து செல்வது உத்தமம்.

7. ஹாஜிகள் தங்களுடைய பணம் முழுவதையும் தாங்களே வைத்திருக்காமல் தங்களுடைய முஅல்லிம் வசம் கொடுத்து விட்டு தேவைப்படுபவற்றை மட்டும் தேவைப்படும் நேரங்களில் வாங்கிக் கொள்ளலாம். தனியாக செல்லும் நேரங்களில் தெரியாத டாக்ஸிகளில் ஏற வேண்டாம். திருட்டு டாக்ஸிகளில் பயணம் செய்யும் ஹாஜிகளை வெகு தொலைவிற்கு கொண்டு சென்று கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

8. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

9. இந்தியன் ஹஜ் மிஷன் மக்காவில் கிஸ்லா பார்க்கின் எதிர்புறத்திலிருக்கும் ஜர்வல் கிஸ்லாவில் செயல்பட்டு வருகின்றது. 11 கிளை அலுவலகங்களும் இருக்கின்றன. தங்களின் கிளை எது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியன் ஹஜ் மிஷன், கிளை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களின் தொலைபேசி எண்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும்.

10. சுத்தமான உணவுகளை மட்டுமே ஹஜ் வேளையில் விற்க வேண்டுமென்ற சவுதி அரசின் கட்டளையின் படி அதை உறுதிசெய்ய அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திடீர் ஆய்வுகளை நடத்தி வந்தாலும் திறந்தவெளிகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் கடைகளிலிருந்து உணவுகளை வாங்குவது கூடாது. சவுதியில் தங்கி இருக்கும் நாட்களில் போஷாக்குள்ள பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டிகள் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். குறிப்பாக மினாவில் தங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. முக்கிய ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றை ஊரிலேயே நம்பத்தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு பயணம் புறப்படுவது நல்லது. ஆவணங்கள் தொலைந்து விட்டால் இந்தியாவில் அவற்றின் நகலை பெறுவது சிரமமாக விஷயமாகும்.

12. மக்காவில் குறிப்பாக மினாவில் ஹாஜிகள் திறந்த வெளியில் துப்புவதோ கழிவுகளை வீசுவதோ கூடாது. குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

13. தங்களுக்கு சொந்தமில்லாத எந்த பொருட்களையும் எங்கு கண்டாலும் ஹாஜிகள் எடுப்பது கூடாது. புனித இடங்களில் பல பகுதிகளிலும் சிசிடிவி காமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலீஸ் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். பிறரது பொருட்களை எடுத்து பிடிபட்டால் திருட்டுக் குற்றத்தில் சிறை செல்ல வேண்டியது வரும்.

14. ஏதாவது காரணத்தால் தங்களை போலீஸ் பிடித்து பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமல் கையெழுத்து போட வேண்டாம்.

15. கடைகளில் சென்று மொட்டையடிப்பது சிறந்தது. ஏனெனில் ஆங்காங்கே கத்தியும் பிளேடும் கொண்டு சுற்றித்திரியும் நபர்களிடம் மொட்டையடித்தால் சுத்தமில்லாத உபகரணங்களால் தலையில் காயங்கள் ஏற்படுவதோடு நோய் தாக்கும் அபாயம் ஏற்படும்.

16. சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளுடன் கூடிய ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது நல்லது.

17. எவருக்கேனும் சுகவீனம் ஏற்படும் பொழுது உறவினர்கள் இல்லையெனில் உடனிருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

18. சவுதி அரேபியா ஒரு பாலைவன பூமி. ஆனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படும் அற்புதமான நகரம் மக்கா. லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் அந்த இடத்தில் அனைவருக்கும் இறைவன் தண்ணீரை தருகிறான். அந்த தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு தொழுகையின் போதும் மக்கள் கூட்டம் ஹரமை நோக்கி வரும். எனவே வயதானவர்கள் தொழுகை நேரத்துக்கு சற்று முன்னதாகவே வந்து எலிவேட்டர்(சுழலும் மின்சார படிக்கட்டு) மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் எலிவேட்டரின் முன்பாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

20. ஹாஜிகள் மதீனாவில் 8 நாட்கள் தங்குவர். மதீனாவிலிருந்து மக்காவிற்கு 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வழியில் அடிக்கடி நிறுத்துவதற்கு டிரைவர் தயங்குவது வழக்கம். எனவே வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்காமல் கழிவறைக்கு செல்வது முதல் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை முன்பே எடுத்து தயாராக இருக்க வேண்டும்.

21. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கூடாரத்தை கண்டுபிடிக்க முடியாது போனால் 'லாஸ்ட் பில்கிரிம் சென்டர்' (Lost pilgrim Center) என்ற காணாமல் போன ஹாஜிகளை கவனிக்கும் இடத்திற்கோ அல்லது இந்திய ஹஜ் மிஷன் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும். வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் தனியாக எக்காரணத்தைக் கொண்டும் ஜம்ராவில் கல்லெறிய செல்லக் கூடாது. அதுபோன்று வீல்சேருடனும் கையில் லக்கேஜூகளுடனும் செல்வது கூடாது. மக்கள் கூட்டத்தின் இடையில் அது நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதோடு போலீசார் லக்கேஜூகளை பறிமுதல் செய்து விடுவார்கள்.

22. மினா என்பது 30 லட்சம் ஹாஜிகள் 5 நாட்கள் சங்கமிக்கும் ஒரு பள்ளத்தாக்காகும். அதன் ஒவ்வொரு அடி நிலமும் விலைமதிக்க முடியாதவை. அங்கு கூடாரத்தில் தங்குவதற்கும் உறங்குவதற்கும் மிகக் குறைந்த இடமே கிடைக்கும். அதனால் வெளியிலிருந்து யாரேனும் வந்து தங்கினால் உடனடியாக அதை முஅல்லிமிடம் தெரிவிக்க வேண்டும்.
இந்த விபரங்களை துண்டு பிரசுரங்கள் மூலமாக தமிழத்திலிருந்து ஹஜ் செல்வோரிடத்தில் விநியோகம் செய்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

-- Regards, S.A.WASEEM AKRAM.