கருவியல் ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஜெயில்ஹம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்தபின்பே- மறுமணம் செய்ய வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை (மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட் மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆணுக்குள்ள டி.என்.ஏ ரேகைப் பதிவு ((DNA Finger Printing) தொடர்பானதே அந்த ஆய்வு. ஓர் ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவானது மூன்று மாதங்களுக்குப்பின் அழிந்துவிடும் என அவரது ஆய்வு கூறியது.
இது தொடர்பாக, எகிப்தில் மருத்துவப் பரிசோதனை துறை பேராசிரியராக உள்ள டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சய்யித் கூறுகிறார்: அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் இஸ்லாத்தைத் தழுவியுள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண் தனக்குரிய பாலின ரேகையைப் பெண்ணிடத்தில் விட்டுச்செல்கிறான். அது மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.
அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் ராபர்ட் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவன்மார்களின் ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. இவ்வாறு மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களிடம் பதிவாகியிருந்தன.
ராபர்ட் ஜெயில்ஹம் அதிரடியாக இன்னொரு காரியமும் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனை செய்தார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அது மட்டுமன்றி, தம்முடைய மூன்று மகன்களில் ஒருவர் மட்டுமே தமக்குப் பிறந்தவர் என்ற உண்மையும் அவரைத் தாக்கியது.
இதிலிருந்து, மூன்று மாத ‘இத்தா’ ஏன் என்பதற்குக் காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால் டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு.
நன்றி:கான் பாகவி THANKS ADIRAI POST.