Thursday, March 7, 2013

எறும்பு பேசும் என்கிறது அல்குரான், விஞ்ஜானம் நிருபணம்


எறும்பு பேசும் என்கிறது அல்குரான் 1400 முன், இன்றைய விஞ்ஜானம் நிருபித்துக் காட்டுகிறது - கொஞ்சம் பாருங்கள்:

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ''எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்'' இங்கே கூறப்படுகிறது.

இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ''எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது.'' (அல்குர்ஆன்:27:18)

அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19)

அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.

மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது

அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இவ்வுதாரணங்களை நாம் மனிதர்களுக்காக விளக்கி வைக்கிறோம் - ஆனால் இவற்றை சிந்தித்தறிவோர் தவிர வேறெவரும் உணர்ந்து கொள்ள மாட்டார்கள். அல்குர்ஆன்:29:43