Saturday, October 17, 2009

இரண்டு அடிதான், வலிக்காது சும்மா படிங்க...

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள்,
செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். 

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது
தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. 
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய 
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் 
நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என
எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை
வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக 
ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு
இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் 
முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான  எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல்,
நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் 
சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

Thursday, October 15, 2009

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள்



 முதுபெரும் இயற்பியல் அறிஞரும், நோபல் பரிசினை வென்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்கூறினார்: மதத்தினை மெய்ப்பிக்காத அறிவியல் முடமானது; அறிவியலை மெய்ப்பிக்காத மதம் குருடானது.
இஸ்லாத்தினைத் தவிர பிற மதங்கள் அறிவியல் ஆய்வுகளைக் கண்டு கொள்ளுவதில்லை. தங்களுடைய வேதப் புத்தகங்களை தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருத்திப் பார்ப்பது இல்லை. அது, அவர்களுக்கு தேவையாகவும் இல்லை. பெரும்பாலான முஸ்லிம் அல்லாதவர்கள், தங்களுடைய வேதப் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள வசனங்கள் தற்கால அறிவியலுக்கு முரணாக இருப்பதை அறிந்து கொள்ளவும் முற்படுவதுமில்லை. ஆனால், இஸ்லாம் இவைகளுக்கு மாற்றமாக மக்களை நோக்கி சவால் விடுகின்றது.
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 3:190) வானங்களும், பூமியும் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளன என்பதை ஆய்வு செய்து குர்ஆனோடு பொறுத்திப் பாருங்கள் என்று அறைகூவல் விடுக்கின்றது.
குர்ஆனில் உள்ள 6 ஆயிரத்திற்கும் அதிகமான வசனங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்கள் அறிவியல் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டுள்ளன. குர்ஆன் என்பது அறிவியல் புத்தகமல்ல; எனினும் நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் எவையும் குர் ஆனோடு முரண்படவில்லை என்பதை நடுநிலையான அனைத்து அறிவியலாளர்களும் ஒத்துக் கொள்வர். திருக்குர் ஆனின் உள்ள அறிவியல் உண்மைகள் எதேச்சேயானவை என்று கூறுவதற்கும் வாய்ப்பில்லை அன்ற அளவிற்கு ஆதாரங்கள் குவிந்து கிடக்கின்றன.
திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அறிவியல் செய்திகளையும் இக்கட்டுரையில் குறிப்பிட முடியாது எனினும் “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதை கீழ்க்கண்ட இரு செய்திகளின் மூலம் அறியலாம்.
பெருவெடிப்புக் கொள்கை:
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)
பெருவெடிப்புக் கொள்கை (‘The Big Bang’) மூலமாகவே, இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதில் வானியற்பியல் வல்லுனர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. பெருவெடிப்புக் கொள்கை என்பது,
1. இந்த முழுப் பிரபஞ்சமும் முன்னதாக மாபெரும் பருப்பொருளாக (Primary Nebula) இருந்தது.
2. பின்னர், பெரு வெடிப்பு ஏற்பட்டு பிரபஞ்சங்கள் உருவாகின.
3. அவை பிறகு நட்சத்திரங்கள், கோளங்கள், சூரியன் - சந்திரன்களாக உருவாகின.
- என்பதாகும்.

அணு சக்தி ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பு (European Organization for Nuclear Research-CERN),இந்த பெருவெடிப்பை ஆய்வுக்கூடத்தில் நடத்தி அணு ஆற்றல் பருப்பொருளாக எவ்வாறு மாறுகின்றது என்பதை ஆய்வு செய்வதற்காக, பிரா‌ன்‌ஸ்-சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 ‌மீட்டர் ஆழ‌த்‌தி‌ல் 27 ‌‌கி.‌மீ. நீள வட்ட வடிவிலான சுரங்கப்பாதையைப் போன்ற சோதனைக்கூடத்தில் தான் அணுக்களை உடைத்து நொறுக்கும் இயந்திரம் கடந்த செப்டம்பர் மாதத்தில் உருவாக்கியது.

(படம்: புரோட்டான்களின் மோதல் வரைபடம்)

சுமார் 595 கோடி டாலர் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பெருவெடிப்பு சோதனை‌யை துவக்கினர். சுரங்கத்தின் 2 இடங்களில் இரு‌ந்து புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மாற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டு‌பிடி‌க்க‌ திட்டமிட்டனர். இதற்காக உருவாக்கப்பட்ட ராட்சத ஹட்ரான் கொலைடர் (Large Hadron Collider-LHC) இயந்திரத்தை கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி வெற்றிகரமாக இயக்கி முதற்கட்ட சோதனையை முடித்தனர். ஆனால் பெருவெடிப்பு சோதனைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் கோளாறு ஏ‌ற்ப‌ட்டது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட ஆய்வுகள் அடுத்தாண்டில் நடக்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு சிரமப்பட்டு நடத்தப்படும் ஆய்வு உண்மையை திருக்குர்ஆன் எளிதாக 21:30ல் நமக்குக் கூறுகின்றது.

படம்: LHC (Large Hydron Collider) எனப்படும் பெருவெடிப்பு ஆய்வுக்கூடம்

பூமிக்கும் வானிற்கும் இடைப்பட்ட பகுதி:
சில காலத்திற்கு முன்பு வரை, பூமிக்கு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் உள்ள விண்வெளியானது வெறும் வெற்றிடம் என்றே அறிவியலாளர்கள் கூறி வந்தனர். ஆனால், தற்போது விண்வெளியானது திட, திரவ, வாயு நிலைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பருப்பொருளான “பிளாஸ்மா” என்ற அயனிய பொருண்மை பாலங்களால் (bridges of matter) ஆனவை என்பது கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வானிற்கும், பூமிக்கும் இடைப்பட்ட பரப்பு வெற்றிடமல்ல என்பது தெளிவாகி உள்ளது.
அவனே (இறைவேனே) வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் படைத்தான். (அல்குர்ஆன் 25:59) என்பதாக அல்லாஹ், தன் இறைவேதத்தில் குறிப்பிடுகின்றான். பூமிக்கும், வானிற்கும் இடைப்பட்ட பகுதி வெற்றிடமாக (vacuum) இருந்தால், இறைவன் பூமியையும், வானங்களையும், “இடைப்பட்ட பகுதியையும்” என்று சேர்த்துக் கூறத் தேவையில்லை.

படம்: பால்வெளி பகுதியில் அயனிய பொருண்மை வெளி (வெற்றிடம் அல்ல என்பதற்கு சான்று)

1400 ஆண்டுகளுக்கு முன்னதாக எந்த ஒரு தனி மனிதனின் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட செய்தியை, அறிவியல் உணமையை இஸ்லாம் எடுத்துக்காட்டுகின்றது.
மேற்கண்ட இரு எடுத்துக்காட்டுகளும், இஸ்லாம் இன்றைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு எவ்வாறு ஒத்துள்ளது என்பதை விளக்குகின்றது. தோண்டத் தோண்டக் கிடைக்கும் புதையல் போல குர்ஆனை ஆய்வு செய்தால், இஸ்லாம் இவ்வுலகிற்கு வழங்கிய அறிவியல் கொடைகளை அனைவரும் அறிய முடியும்.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காக (பூமியின்) பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)


Wednesday, October 14, 2009

உங்கள் வாழ்க்கைத் துணைவி

உங்கள் வாழ்க்கைத் துணைவி 
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُن  
'அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).
—————————————————————————————–

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான் உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் எஃகு போன்று நின்று அரவணைத்து நிற்பவள்!நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும்;, சுகத்தையும்;, துக்கத்தையும்;, கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.
சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

"அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்" (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன. அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.
இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது
وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا  

மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது' (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.
திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளரவேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப்பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.
மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும்உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர் என்று பெயர் எடுப்பவர்தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி; இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.
விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.
சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:
ادْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ 

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்: 

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.
தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்..) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு.

Monday, October 12, 2009

Beautiful, Meaningful, Melodious,Perfect....Which one?


There is no word as beautiful as Allah.
No example as beautiful as Rasulallah.
No lesson as beautiful as Islam.
No song as melodious as Azan.
No charity as meanigful as Zakat.
No encyclopedia as perfect as Al Quran.
No exercise as perfect as Namaz
No diet as perfect as fasting
No journey as perfect as Hajj.

                  Allah bless all of us - Amin

Sunday, October 11, 2009

இந்திய ரயில்வே டீ, காப்பி


உங்கள் டீ தயாரிக்கும் இடம் ரயில்வே கழிப்பிடம் அங்குஉள்ள தண்ணில்



இப்படம் Janshatabadi எக்ஸ்பிரஸ் எடுக்கப்பட்டது.