Friday, February 12, 2010

Must See: If Allah had given you health...

It may change your life, way of thinking and aims in life.

It is a story of a person from Bahrain named Ibrahim Nasser. He has been paralyzed completely since birth and can only move his head and fingers. Even his breathing is done with the help of instruments.
It was the wish of this young man to meet sheik Nabeel Al-Awdi. So Ibrahim's father spoke the sheik on the phone in order to arrange a visit to Ibrahim.
This is sheik Nabeel in the airport.

Ibrahim was very happy to see sheik Nabeel open the door to his room. We can only see his happiness from his expression as he is unable to speak
The moment sheik Nabeel entered Ibrahim's room
And this is Ibrahim's expression on meeting sheik Nabeel

Notice the breathing instrument around Ibrahim's neck.. he is unable to even breath normally.
And a kiss on the forehead for Ibrahim
Ibrahim with his father, uncle and sheik Nabeel

Thus sheik Nabeel and Ibrahim started talking about da'wa on the internet and the striving it requires.
They also exchanged some stories
And during their conversation sheik Nabeel asked Ibrahim a question. A question that made Ibrahim weep... and tears rolled down Ibrahim's cheek.
Ibrahim couldn't help but weep when he remembered some painful memories
Here sheik Nabeel wipes the tears from Ibrahim's face

Do you know what question it was that made Ibrahim weep?

The sheik asked: Oh Ibrahim.. if Allah had given you health.. what would you have done?

And thus Ibrahim wept bitterly and he made the sheik, his father, his uncle and everyone in the room weep.. even the camera man wept

And his answer was: By Allah i would have performed my salaa (prayer) in the masjid (mosque) with joy.. i would have used the favor of health in everything that would please Allah Subhanehu we Ta'ala

Dear brothers and sisters Allah has favored us with agility and health

But we do not perform our salaa in the masjid!!! And we sit for hours in front of the computer or TV

Wednesday, February 10, 2010

Monday, February 8, 2010

I kindly request you all to have a look on every each single point, do not miss them please……...


• A single bad (evil) woman is equal to 1000 bad men A single pious, practicing woman is equal to 70 saints (aulia ekraam)
• Two rakaats namaaz of an aalimah woman are better than 80 rakaats of ordinary women
• Every single woman going to hell will take four (4) jannati men. Because they did not fikr nor had they cared in duniya about the Deen and Imaan of that woman and did not teach her Deen, these four men
will be:
• Her father • Her brother • Her husband & • Her son
• A breastfeeding woman gets one good for each drop of milk that is fed to the child.
• When a husband comes home full of worries and the wife extends warm welcome to him and consoles him; she receives the reward of half jihad
• A woman, who is deprived of sleep owing to her child crying at night, receives the sawaab of freeing 20 slaves.
• When a husband and a wife look at each other with love and affection, Allah Paak himself looks at both of them with love and affection.
• A woman who sends out her husband in the path of Allah and stays at home by herself, maintaining her honour and dignity (i.e. protecting her against temptation and dishonesty) will enter jannat 500 years before her husband while 70,000 angels and hoors will serve her. She will be given ghusl in jannat and sitting nmountains of pearls, she
will await the arrival of her husband
• A woman who is rendered restless owing to the illness of her baby and yet kept on striving to comfort the baby, Allah Talaah forgives all her sins and gives her thesawaab of 12 years accepted in ibaadat.
• While milking her animal (cow, goats, ect), if a woman makes the zikr of bismillah, that every animal makes dua to Allah Taalah on her behalf.
• When a woman makes the zikr of bismillah while preparing the dough (for roti), her livelihood is increased (i.e . she receives barakat in her rozi).
• When a woman makes zikar while sweeping, she receives the sawaab of sweeping baitullah (kaba).
• A chaste woman who is mindful of namaaz and roza, also makes khidmat for her husband, for her all the 8 doors of jannat are opened. She may enter from whichever doors she likes.
• The namaaz and ibaadat of a woman disobedient to her husband do not reach heaven.
• Every night of an expectant mother (a woman who is carrying a baby in her womb) is counted as spent in ibaadat and every day as spent in fasting.
• A woman receives the sawaab of 70 years of namaaz and roza on giving birth to one child and the pain she suffered in every vein of her body while giving birth, for that she will receive the sawaab of one hajj.
• If a woman dies within 40 days after giving birth, Allah Taalah gives her the status of shahaadat (i.e. she dies as a shaheed).
• Upon the child crying at night, if the mother feeds the child (gives milk to the child) without cursing, she receives the sawaab of performing namaaz for one year.
• When a child finishes the period of breast-feeding, an angel comes and gives glad tidings (news) to the mother that Allah has made jannat wajib for her
• When the husband comes home to sleep and the wife gives him food to eat (not being involved in dishonesty with regard to herself and her husband's belongings), Allah Tallah gives her the sawaab of 12 years of ibaadat.
• When the wife presses the legs of her husband without asking him, her to do so, she gets the sawaab of giving charity 7 ounce of GOLD, and if she presses his legs after he asks her to do so, she receives the sawaab of giving 7 ounces of SILVER in sadaqua.
• When a woman's husband dies while he was happy and pleased with her, jannat becomes wajib for her.
• A husband's teaching one masla to his wife is equal to 80 years ibaadat.
• In jannat people will go to visit (see) Allah Taalah, but Allah Tallah himself will visit (to see) the woman who has observed PARDAH while in dunyah.
• Woman who wears thin garment (transparent, see-through garment) or who arouses passion in men, or meet men they are not allowed to mix or move about openly while heavily made up or who live without pardah, will never enter jannat. In fact they will not even smell the fragrance of jannat.
• A woman who has undergone a great amount of suffering and difficulties in this world will be classified with hazrat Aasia (r.a). She was the wife of the firaun (pharaon) who despite the fact that she was his wife, tortured and persecuted her, to renounce Deen and Imaan. She gave her life in the process ( i.e. she died of the punishment
inflicted to her), but did not forsake Imaan.
• If woman glances at men she is not allowed to see according to the shariat, Allah Taalah sends his curse upon her, just as it is forbidden for a man to glance at women he is not allowed to see.
• May Allah give every Muslim men & women HIDAYA to stand by Islamic Rules and keep far away from the sin.
• Note: After reading this, can you please kindly forward it to other
Muslim brothers & sisters...

Jazaakallah!

Saturday, February 6, 2010

Worth watching

Worth watching and please show it to kids at home or family.

It’s a healthier practice to change the way we act in response to our sneeze, please change your practice.

Wednesday, February 3, 2010

எச்சரிக்கை!!! காசாகும் குடும்ப அந்தரங்கங்கம்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.

இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமானபெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான்இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும்
வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச்
சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன்
தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை
தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒருசெல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது.டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த
ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப
வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட
பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும்புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க.சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை
உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம்.
போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட
மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை
சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார்
என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு,'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று
சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர்
பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே
முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும்
பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள்இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன
விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!
SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.