Wednesday, December 21, 2011

விரும்புகின்றீர்களா?

உங்களின் உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமா? உங்களின் வாழ்நாள் நீள வேண்டுமா?
தனது உணவு விஸ்தீரணப்படுத்தப்பட வேண்டுமென்று யார் ஆசைப்படுகின்றாரோ இன்னும் தன் வாழ் நாள் நீள வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ அவர் தன் இரத்த பந்தத்தை சேர்த்து நடக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களை பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஸுப்ஹுத் தொழுகையை தொழுகின்றாரோ அவர் (அன்றைய தினம்) அல்லாஹ்வின் பொறுப்பிலிருக்கின்றார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் பாவங்கள் அதிகமாக இருந்தாலும், அது மன்னிக்கப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் ஒரு நாளில் நூறு தடவை

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ

'சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என ஓதுகின்றாரோ, அவரின் பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும், அது மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
உங்களுக்கும் நரகத்துக்கும் மத்தியில் நாற்பது ஆண்டுகள் துலை தூரம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நோன்பு நோற்கின்றாரோ, அல்லாஹ் அவரை நாற்பது ஆண்டுகள் தொலை தூரம் நரகத்திலிருந்து தூரமாக்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்கள் மீது, அருள்புரிய வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?
யார் என்மீது ஒரு தடவை ஸலவாத்து கூறுகின்றாரோ, அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்து கூறுகின்றான் (அருள் புரிகின்றான்); என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
அல்லாஹ் உங்களின் அந்தஸ்தை உயர்த்த வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
யார் அல்லாஹ்வுக்காக பணிந்து நடக்கின்றாரோ, நிச்சயமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்விற்கு சமீபத்தில் இருக்க விரும்புகின்றீர்களா?
ஒரு அடியான் தன் இரட்சகனிடம் மிக சமீபமாக உள்ள நேரம், அவன் சுஜுது செய்யும் நேரமாகும். ஆகவே (அந்த நேரத்தில்) அதிகம் பிரார்த்தியுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஹஜ் செய்த நன்மையைபெற விரும்புகின்றீர்களா?
ரமளான் மாத்தில் உம்ரா செய்வது ஹஜ்ஜுக்கு சமமாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கத்தில் வீடு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றீர்களா?
அல்லாஹ்விற்காக யார் ஒரு பள்ளியை கட்டுகின்றாரோ, அல்லாஹ் அவருக்காக அதுபோன்ற (வீட்டை) சுவர்க்கத்தில் கட்டுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
அல்லாஹ்வின் திருப்தியை அடைய விரும்புகின்றீர்களா?
ஒரு கவள உணவை உண்டுவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும், ஒரு வாய் தண்ணீர் அருந்திவிட்டு அல்லாஹ்வை புகழும் அடியானையும் நிச்சயமாக அல்லஹ் பொருந்திக் கொள்கின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.. (முஸ்லிம்)
உங்களின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் பிரார்த்தனை தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத்)
ஒரு வருடம் முழுமையாக நோன்பு நோற்ற நன்மை கிடைக்க வேன்டுமென விரும்புகின்றீர்களா?
ஓவ்வொரு மாதமும் மூன்று நோன்பு நோற்பது, வருடமெல்லாம் நோன்பு நோற்பதற்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
மலையளவு நன்மை கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றீர்களா?
ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தப்படும் வரை அந்த ஜனாஸாவில் யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு ஒரு கிராத்து நன்மையும், அந்த ஜனாஸா அடக்கம் செய்யப்படும் வரை யார் கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரு கிராத்து நன்மையும் கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இரு கிராத்து என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. இரு பெரும் மலை அளவு என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
சுவர்க்கத்தில் நபி(ஸல்) அவர்களுடன் இருக்க விரும்புகின்றீர்களா?
நானும் அனாதையை பொறுப்பெடுப்பவரும் இவ்வாறு சுவர்க்கத்தில் இருப்போம் என, நபி(ஸல்) அவர்கள் தனது நடு விரலையும் ஆள்க்காட்டி விரலையும் சுட்டிக்காட்டினார்கள். (புகாரி)
அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் போராளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது விடாமல் தொடர்ந்து நோன்பு நோற்கும் நோன்பாளியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா? அல்லது இரவெல்லாம் நின்று வணங்கும் வணக்கதாரியின் நன்மை போன்று பெற விரும்புகின்றீர்களா?
விதவைக்கும் மிஸ்கீனுக்கும் உதவி செய்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவரைப் போன்றவராவார், இப்படியும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எண்ணுகின்றேன், அதாவது இரவெல்லாம் நின்று வணங்குபவரைப் போன்றும் விடாமல் நோன்பு நோற்பவரைப் போன்றும் என்று.(அறிவிப்பாளருக்கு ஏற்பட்ட சந்தேகம்) (புகாரி, முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்களே உங்களுக்கு சுவர்க்கத்தை பெற்றுத்தர விரும்புகின்றீர்களா?
யார் தன்னுடைய இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரு கால்களுக்கு மத்தியிலுள்ளதையும் (ஹராத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக) எனக்கு உத்தரவாதம் அளிக்கின்றாரோ, அவருக்கு சுவர்க்கத்தை வாங்கிக் கொடுப்பதற்கு நான் உத்தரவாதம் அளிப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
மரணத்துக்குப் பின்னும், உங்களின் நன்மைத்தட்டில், நன்மை எழுதப்பட வேண்டுமா?
ஒரு மனிதன் மரணித்தால் மூன்றைத்தவிர மற்ற எல்லா அமல்களும் துண்டித்து விடும், நிரந்தர தர்மம், பிரயோஜனம் உள்ள அறிவு, தனக்காக பிரார்த்தனை செய்யும் ஸாலிஹான பிள்ளை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷம் உங்களுக்கு கிடைக்கவேண்டும் என விரும்புகின்றீர்களா?
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
முழு இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
யார் இஷாத் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு பாதி இரவு நின்று வணங்கிய நன்மை கிடைக்கும், யார் சுப்ஹுத் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு முழு இரவும் நின்று வணங்கிய நன்மை கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
ஒரு நிமிடத்தில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை ஓதிய நன்மை கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்றீகளா?
சூரத்துல் இக்லாஸை ஒரு தடவை ஓதுவது குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்கு சமமாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
உங்களின் நன்மைத் தராசு, அதிகம் இடையுள்ளதாக ஆக வேண்டும் என விரும்புகின்றிர்களா?
இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْم

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, சுப்ஹானல்லாஹில் அளீம்என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

Wednesday, November 23, 2011

ஓர் ஈமானிய‌ப் ப‌ய‌ண‌ம்‏

وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.



உங்க‌ள் க‌ண்க‌ளை மூடிக்கொண்டு, இத‌ய‌த்தை ச‌ற்றுதிற‌ந்து வைத்துக் கொள்ளுங்க‌ள்.....


இப்போது க‌ற்ப‌னையில் உங்க‌ள் முன்னால்.... ஓருஜ‌னாஸா,
நான்கு பேர் நான்கு மூலைக‌ளையும் சும‌ந்த‌வ‌ண்ண‌ம் உங்க‌ளை நெருங்கி வ‌ருகின்ற‌ன‌ர்.


உங்க‌ள் முன்னிலையில் ஜ‌னாஸா வைக்க‌ப்ப‌டுகின்ற‌து.
அத‌ற்கான‌ தொழுகையை நிறைவேற்றுவ‌த‌ற்காக‌ அனைவ‌ரும் அணிவகுத்து நிற்கின்ற‌ன‌ர்..


நான்கு த‌க்பீர்க‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன‌. க‌டைசி த்த‌க்பீருட‌ன் தொழுகை முடிகின்ற‌து.


இப்போது உங்க‌ள் ம‌ன‌தில் ஒரு நெருட‌ல்....
அந்த‌ மையித் யாருடைய‌து என்ப‌தை பார்க்க‌வேண்டும் போல் ஓர் உண‌ர்வு.
அடிமேல் அடி எடுத்து நெருங்குகின்றீர்க‌ள். அத‌ன் முக‌த்தை மூடியிருக்கும் அத‌ன் திறையை மெதுவாக‌ அக‌ற்றுகின்றீர்க‌ள்.?????????????????????????



இப்போது ...!

இப்போது ...!
நீங்க‌ள் பார்த்த‌து யாரையோ அல்ல உங்க‌ள் சொந்த‌ முக‌த்தைதான்!!!!!!!!!!
நீங்க‌ள்தான் அங்கே மையித்தாக‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ளீர்க‌ள்.


ஆசைப்ப‌ட்டு உங்க‌ளை மாய்த்துக்கொண்டு உழைத்துத் திரிந்த‌ உங்க‌ள் வாழ்க்கை முடிந்துவிட்ட‌து.


மாடிக்க‌ட்ட‌ட‌ங்க‌ள் க‌ட்டுவ‌த‌ற்காக‌ ஹ‌ஜ் போகாது சேர்த்த‌ உங்க‌ள் ப‌ண‌ம் பிர‌யோச‌ன‌ம‌ற்ற‌தாகிவிட்ட‌து.


தொழும் நேர‌ங்க‌ளை ம‌ற‌ந்த்து நீங்க‌ள் க‌ல‌ந்துகொண்ட கூட்ட‌ங்க‌ள் வீணாகிவிட்ட‌து..


உங்க‌ள் ஆட‌ம்ப‌ர‌வாக‌ன‌ங்க‌ள்,
குழ‌ந்தைச் செல்வ‌ங்க‌ள்,
அன்பும‌னைவி..........எல்லாமே முடிந்துவிட்ட‌து.


இப்போது உங்க‌ளுக்காக எஞ்சி இருப்ப‌து நீங்க‌ள் உடுத்தி இருக்கும் உங்க‌ள் க‌ப‌ன் பிட‌வைம‌ட்டுமே!!


உங்க‌ள் உற்றார் உற‌வின‌ர்க‌ள் உங்க‌ளை சும‌ந்து உங்க‌ள் நிர‌ந்த‌தர வீட்டில் வைத்துவிட்டார்க‌ள்.


ஒரு பிடி ம‌ண் உங்க‌ள் மேல் விழுகிற‌து.


உல‌க‌மே இடிந்து விழுந்துவிட்ட‌து போல் உண‌ர்கிறீர்க‌ள்.
கொஞ்ச‌மாக‌த் தெரிந்து கொண்டிருந்த‌ வெளிச்ச‌ம் இப்போது அடியோடு இல்லாம‌ல் போய்விட்ட‌து.


இந்த‌நிமிட‌ம் .... காரிருளில் நீங்க‌ள் ம‌ட்டுமாக‌
த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.


எல்லோரும் ந‌ட‌ந்துசொல்லும் நில‌ம‌ட்ட‌த்திற்கு கீழால் ஆர‌டி நில‌த்தில் நீங்க‌ள் ம‌ட்டும் .


நீங்க‌ள் ம‌ட்டும் த‌னித்துவிட‌ப்ப‌ட்டுவிட்டீர்க‌ள்.. !!
காசோ ப‌ண‌மோ,
குழ‌ந்தைக‌ளோ, ம‌னைவியோ இல்லாதத‌னிமை .


குற‌ந்த‌ப‌ட்ச‌ம் ஓர்கைய‌ட‌க்க‌த் தொலைபேசியாவ‌து, இல்லாதத‌னிமை.
இர‌ண்டு ம‌ல‌க்குமார் உங்க‌ளை நோக்கிவ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள்..
இப்போது நீங்க‌ள் என்ன‌ப‌தில் கூற‌த்தயாராகி இருக்கின்றீர்க‌ள்.
அந்த‌ நிமிட‌த்தை கொஞ்ச‌ம் க‌ற்ப‌னையில் கொண்டுவந்து, (இந்த‌க்கேள்விக‌ளை கொஞ்ச‌ம் கேட்டுப்பாருங்க‌ள்..)


நான் உண்மையான‌ ஒருமுஃமீனா??
குரானின் ஒளியில் வாழ்கிறேனா??

தொழுகையை விடாது தொழுகிறேனா??
வ‌ருட‌ம் ஒரு முறை வ‌ரும் ர‌ம‌லானில் அல்லாஹ்வுக்காக‌ நோன்பு நோற்கின்றேனா??
க‌ட‌மையான ஹ‌ஜ்ஜை உரிய‌முறையில் நிறைவேற்றுகின்றேனா?
போன்ற இன்னோர‌ன்ன‌ கேள்விக‌ளுக்கு ஆம் என்ற‌ விடையை தைரிய‌மாக‌ கூற‌ப்போகின்றீர்க‌ளா?


கால‌த்தை வீணாக‌க் க‌ட‌த்திவிட்டேனே.
ஒரு முறையாவாது அல்ல‌ஹ்வின் திருப்பொருத்த‌த்திற்காக‌ ஹ‌ஜ் செய்திருக்க‌லாமே,
500/= நோட்டுக்க‌ளை விள‌ம்ப‌ர‌த்துட‌ன் கொடுத்த‌த‌ற்குப்ப‌திலாக, யாருக்கும் தெரியாம‌ல் ந‌ன்மைக‌ளை கொள்ளை அடித்திருக்க‌ளாமே.


என்நோயை சாட்டுவைத்து நோன்புக‌ளை விட்டுவிட்டேனே, கொஞ்ச‌ம் ம‌ன‌ச்சாட்சிக்கு பொருத்த‌மாக‌ ந‌ட‌ந்து கொண்டிருக்க‌ளாமே.


வ‌ட்டி எடுக்காம‌ல் லாபமோ ந‌ட்ட‌மோ வியாபார‌த்தையே முழும‌ன‌தாக‌ செய்திருக்க‌ளாமே.


குரான் கூறிய‌ ஹிஜாபின் வாழ்க்கையை வாழ்ந்திருக்களாமே
அன்னிய‌ ஆட‌வ‌ர்க‌ளின் முன்னால் என் அழ‌ங்கார‌த்தை ம‌றைத்து க‌ண‌வ‌னுக்கு ம‌ட்டும் காட்டி இருக்க‌லாமே.


குழ‌ந்தைக‌ளை சிற‌ந்த‌முறையில் வ‌ள‌ர்த்திருக்க‌லாமே..
தொலைக்காட்சியின் முன்ம‌ண்டியிட்ட‌த‌ற்குப்ப‌திலாக‌ சுஜூதில் இறைவ‌னை நெருங்கி இருக்க‌லாமே.


தொலைபேசியில் அர‌ட்டை அடித்த‌த‌ற்குப்ப‌திலாக‌ குரானுட‌ன் உரையாடி இருக்க‌ளாமே, இல்லைஏதாவ‌துப‌ய‌னுள்ளபுத்த்க‌த்தைவாசித்துஇருக்க‌ளாமே..
என கைசேத‌ப்ப‌ட‌ப் போகின்றீர்க‌ளா??????

சிந்தியுங்க‌ள்!!


உல‌க‌ வாழ்க்கை என்ப‌து ஒரு முறைதான், அதுகாத்திருக்கும் ஒரு இட‌ம‌ல்ல‌.. காத்திருந்தாலும் இழ‌ந்தால் மீண்டும் கிடைப்ப‌தில்லை. இம்மை என்ப‌து ஒரு ப‌ய‌ண‌ம் தாம‌திக்காம‌ல் எம்மை ம‌றுமையின் வாச‌லில்கொண்டு சேர்த்திடும்.. அந்த‌ப் ப‌ய‌ண‌த்தில் க‌ண் மூடித்த‌ன‌மாய் கால‌த்தை க‌ழிக்காம‌ல் திட்ட‌மிட்டு எம்மை நாம் வ‌ள‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டும்.


இல்லையேல்.. எம்வாழ்வும்இவ்விறைவாக்குக‌ளின்பிர‌திப‌ளிப்பாகிவிடும்.
நஊதுபில்லாஹிமின்ஹா...
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴿9﴾ ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.


وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ ﴿10﴾ உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான்.
وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاء أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ﴿11﴾
ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு தெரிந்தே இருக்கின்றான்.
க‌டைசித் தருண‌த்தில் இறைவ‌னிட‌ம் கெஞ்சும் துர‌திஷ்டவாளிக‌ளாய் நாம் இருக்காது, எம்மை இறைவ‌னின் பாதையில் திசை திருப்பிக் கொள்ள‌வேண்டும்.


ஏனெனில் இறைவ‌ன் த‌ன் அருள்ம‌றையில்
لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْஎந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. (சூரார‌ஃத் 11)என‌க்கூறுகிறான்.

Saturday, November 5, 2011

Monday, October 17, 2011

பெண்களே! சிந்தியுங்கள்!



(ஒரு நீளமான ஹதீதில்…… நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை முடித்த பின், அங்கிருந்த நபித்தோழர்கள்) அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழுமிடத்தில் ஏதோ ஒரு பொருளை பிடித்தது போன்று நாங்கள் பார்த்தோம் பின்பு (அவ்விடத்திலிருந்து) பின் வந்ததையும் நாங்கள் பார்த்தோம் என்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் சுவர்க்கத்தை பார்த்தேன், (அங்கிருந்து) திராட்சைப் பழக்குலையை பிடித்தேன், அதை நான் எடுத்திருந்தால் இவ்வுலகம் இருக்கும் வரை நீங்கள் அதை உண்ணக்கூடியவர்களாக இருந்திருப்பீர்கள், இன்னும் நரகத்தையும் காட்டப்பட்டேன், அன்றைய நாளின் அவலத்தைப் போல் நான் என்றும் பார்த்ததில்லை, அதில் அதிகம் பெண்கள் இருப்பதைக் கண்டேன், அல்லாஹ்வின் தூதரே! (அது) எதனால் என்றார்கள், அவர்கள் நிராகரிப்பதின் காரணமாக என்றார்கள், அல்லாஹ்வையா நிராகரிக்கின்றார்கள்? என கேட்கப்பட்டது, கணவனை நிராகரிக்கின்றார்கள், அவர்களுக்கு செய்யப்படும் உபகாரத்தை நிராகரிக்கின்றார்கள், அந்தப்பெண்களின் ஒருத்திக்கு காலம் முழுக்க உபகாரம் செய்து, பின்பு உங்களில் ஒரு தவறை அவள் கண்டுகொண்டால், நான் உன்னிடத்தில் எந்த நலவையும் கண்டதில்லை என்று கூறிவிடுவாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை ஏழைகளாக பார்த்தேன், இன்னும் நரகத்தை நோட்டமிட்டேன், அதில் அதிகமானவர்களை பெண்களாக பார்த்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)
நோன்புப் பெருநாள் அல்லது ஹஜ்ஜுப் பெருநாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கு வெளியாகிச் சென்றார்கள், (தொழுகையை முடித்துவிட்டு) திரும்பி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள். தருமம் செய்யும்படி அவர்களுக்கு ஏவினார்கள், கூறினார்கள், மனிதர்களே! தர்மம் செய்யுங்கள், பெண்களின் பக்கமும் சென்றார்கள், பெண்கள் கூட்டமே! தர்மம் செய்யுங்கள், உங்களை நரகவாதிகளில் அதிகமாகவர்களாக நிச்சசயமாக நான் பார்த்தேன் என்றார்கள், எதனால் அது அல்லாஹ்வின் தூதரே! என (அங்கிருந்த) பெண்கள் கேட்டனர், அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் அதிகம் சாபம் இடுகின்றீர்கள், கணவர்மாரின் உபகாரத்தை மறுக்கின்றீர்கள், அறிவிலும் மார்க்கத்திலும் குறைவுள்ள உங்களைவிட மிகவும் அறிவுள்ள ஒரு ஆணிண் சிந்தனையை போக்கக்கூடியவர்களாக வேறு யாரையும் நான் பார்க்கவில்லை என்றார்கள்…. (புகாரி)

Thursday, October 13, 2011

DUA

ISLAMIC VIDEOS - Dua for the Gaza People by Sheikh Mishary Rashid Al Afasy



Travelling Dua recited by Al Shaikh Mishari Rashid Al Affasi


Duas (Supplication) After Salah by Al Sheikh Mishari Rashid Al Affasi


ISLAMIC VIDEOS : Sayyidul Istaghfar - The Cheif Dua of Forgiveness


ISLAMIC VIEOS : Dua After Azan



ISLAMIC VIDEOS - Dua for when you waking up by Mishari Rashid Al Affasi


ISLAMIC VIDEOS - Dua When entering Home by Mishari Rashid Al Affasi


ISLAMIC VIDEOS - Dua when in stress by Mishari Rashid Al Affasi


ISLAMIC VIDEOS - Dua when going to mosque by Mishari Rashid Al Affasi


ISLAMIC VIDEOS - Dua when Visiting the grave by Mishari Rashid Al Affasi