Wednesday, February 3, 2010

எச்சரிக்கை!!! காசாகும் குடும்ப அந்தரங்கங்கம்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.

இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமானபெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான்இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும்
வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச்
சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டுபேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன்
தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை
தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒருசெல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது.டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த
ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப
வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட
பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும்புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க.சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை
உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம்.
போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட
மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை
சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார்
என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு,'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று
சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர்
பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே
முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும்
பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள்இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன
விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!
SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.

Thursday, January 28, 2010

நற்குணம்

"நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)

நபி அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும் விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)

நபி அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)

நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபிஅவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)

நபி அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)

"உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)

நபி அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)

அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
Thanx to readtamil.net

Sunday, January 24, 2010

என்னை அழையுங்கள் !!!!


அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப் புகளையும் கொடுத்துள்ளான். அல்லாஹ் மனி தனிடம் கூறுவது ஒன்றே ஒன்றுதான். நீ எனக்கு மட்டுமே அடிபணியவேண்டும் எனக்கு எதையும் இணையாக்காதேஎன்பது தான் அது! இவ்வாறு இறைவனுக்குமட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் அல்லாஹ்வை மட்டும் அழைத்து பிரார்த்தனை செய்வது!
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்பிறகு, ‘என்னைஅழையுங்கள்! உங்களுக்கு பதிலளிக்கிறேன். எனக்கு அடிபணி வதை விட்டும் பெருமையடிப் போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று அல் லாஹ் கூறுகிறான்.

(40:60) என்ற இறைவச னத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காட் டினார்கள்.
அறிவிப்பு: நுஃமான் பின் பஷீர்(ரழி) நூல்:திர்மிதி.
எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக் கத்தை வல்ல அல்லாஹ் ஒருவனிடம் மட் டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது என்பது தெளிவாகிறது. ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தில் பெரும் பாலான மக்கள் இந்த இறைவசனத்தற்கு மாற்றமாக சமாதி வழிபாட்டில்,அவ்லியாக் கள், நாதாக்கள் என்ற பெயரில் வழிபடும் அவநிலையை காண நேரிடுகிறது. இந்த அவல நிலைக்கு 7வருடம் அரபு மதரஸாக் களில் மார்க்கக் கல்வி பயின்ற மவ்லவிமார் களும் ஆதரவு தெரிவிப்பது, அறியாத மக்களை,நாளை மறுமையில் இறைவனுக்கு இணை வைப்பான ஷிர்க்என்ற மாபாதக செயலை செய்ததற்கான கூலியாக நரக வேதனையில் கொண்டு போய் சேர்க்கும் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால்நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்என்று அல்லாஹ் அல்குர்ஆன்2:186

வசனத்தில் கூறுகின்றான்.
பிரார்த்தனையில் கடைபிடிக்க வேண் டியஒழுங்குமுறைகள்:
பிரார்த்தனை செய்யும்போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும், பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும். உங்கள் இறைவனைப் பணிவுட னும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங் கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்7:55) நபி ஜகாரிய்யா (அலை) அவர்கள் இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல் குர்ஆன்19:3)
அச்சத்துடனும் உறுதியான நம்பிக்கையுட னும் அல்லாஹ்வை மட்டும் பிரார்த்தனை செய்யுங்கள்நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது.’ (அல்குர்ஆன் 7:6)
வலியுறுத்திக்கேட்பது:
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது நீ விரும்பினால் தா! இல்லை யென்றால் தர வேண்டாம்என்பது போன்று கேட்கக் கூடாது. மாறாக, ‘இதை நீ தந்து ஆகவேண் டும் உன்னால் தான் தரமுடியும். வேறு யாராலும் தரமுடியாதுஎன்று வலியுறுத் திக் கேட்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீங்கள் பிரார்த்தனை செய்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று கேட்க வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது அல்லாஹ்வை நிர்பந்திக்காது. ஏனெனில் அவனை (அல்லாஹ்வை)நிர்ப்பந்திப்பவர் யாரு மில்லை.

அறிவிப்பு: அனஸ்(ரழி) நூல்: புகாரி.
பாவமானதைக் கேட்கக் கூடாது:
அல்லாஹ்;வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படவில்லைஎன்று மனிதன் கூறுகின்றான். உறவை துண்டிக்கும் விஷயத்திலும் பாவ மானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்கு (பிரார்த்தனை செய்பவரு க்கு)ப் பதில் அளிக்கப்படாது.
அறிவிப்பு: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
அவசரப்படக்கூடாது
பிரார்த்தனை செய்யும்போது அவசரப்பட க்கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தனை செய்தேன் எனக்கு இறைவன் எதுவும் தரவில்லை என்று கூறி பிரார்த்தனை செய்வதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த் தனை செய்தால் அது அல்லாஹ்வால் ஏற் றுக் கொள்ளப்படாது நான் பிரார்த்தனை செய்தேன். ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப் பட வில்லை என்று கூறி நீங்கள் அவசரப் படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்க ப்படும்’. என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பு:அபூஹுரைரா(ரழி)நூல்: புகாரி.
நிராசை அடையக்கூடாது:
சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள் அவர்கள்கேட்கும் அந்த காரி யம் நிறைவேறவில்லையென்றால் அல்லாஹ் வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கா தீர்கள்! (அல்லாஹ்வை) மறுக்கும் கூட்டத் தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 12:87)
என் அடியார்களே! எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமேதீங்கிழைக்க வேண்டாம். நிச்ச யமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன் என் று (அல்லாஹ் கூறுவதை) (39:53) தெரிவிப்பீராக!

Tuesday, January 19, 2010

10 Tips to Fight Depression !


I would like to share this article,which is very usefull for everyone.

Well,from last few days,i’m xtrmly depressed,so,I was looking for some solution.and i found this article.

.. Feeling down in the dumps, depressed, having the blues: these are just some of the terms used to describe a feeling of hopelessness and despair that can hit even the most optimistic of us at some point in our lives. While clinical depression requires proper professional treatment, the occasional feeling of sadness due to factors ranging from economic difficulty to harassment and discrimination can be helped through some simple spiritual practices. Here are a couple that can help:

1. Look at those below you

The Prophet Muhammad, peace and blessings be upon him, said: “Whenever you see someone better than you in wealth, face or figure, you should look at someone who is inferior to you in these respects” (Bukhari, Muslim). If you are reading this article online, consider this: you are one of the lucky set of human beings on the planet who can afford a computer and internet connection or at least have access to one. The United Nations Development Program’s 2007 Human Development Report notes that there are still around 1 billion people living worldwide at the margins of survival on less than $1 a day, with 2.6 billion living on less than $2 a day. Also consider that in the Quran (14:7), God says that if you are thankful to Him for what you have, He blesses you with more.

2. Serve your fellow human beings

The best way to thank God is to serve humanity, especially those who have less than you. Serving others is uplifting and rewarding. It helps us gain a better perspective on life’s challenges, making us realize how very often, are problems seem so small compared to the awesome difficulties others face. That’s why when the Prophet Muhammad, peace and blessings be upon him, and the Muslims were a small, poor and persecuted community, they used to give to the poor even more. They understood that when you are generous when you have less, you achieve the perspective of a winner. You are focused on the bigger picture.

3. Read Surah Ad Duha

According to one report, after the Prophet had begun receiving revelation from God, at one point a long period of time passed with no such communication from Allah. As a result, the Makkans ridiculed the Prophet and he became severely depressed. That’s when this chapter was revealed (Quran 93: 1-11). The chapter is a beautiful reminder to us to see life in the greater scheme of things, to be grateful for what we have and to never give up striving for what is right. This chapter of the Quran can be considered a direct recipe from God for depression.

4. Turn to God in all situations

Remember that nothing can harm you without the consent of God. While you must take care of yourself, rely on God and know that He is always with you and only He can give you strength in difficult times. Also remember that He will help you can come out of a trying situation as a better person if you deal with it positively.

5. Remember God’s Names

God has many beautiful Names which describe His attributes and powers. These are reminders of His Love, Mercy, Forgiveness, Justice, Strength and much, more. Supplicating to God using these Names reminds us that God has these attributes more than any other being and that we can and must rely on Him during good and bad times.

6. Say ‘Hasbun Allahu wa Ni’ mal Wakeel‘;

This has been translated as “God suffices me and He is the best guardian.” It is an excellent way of reminding us that whatever worries we have or problems we face, God has the answer and cure to all of them and is the only One who can really do what is best for us.

7. Make sure when you leave home,

you read this Dua ‘In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah.’ Bismillahe tawakkaltu alAllahe la haula wa la quwwata illa biAllah.

8. Take your spiritual break from the world,

five times a day Taking a break away from school, work or other life activities to spend a few minutes to remember God helps you reconnect with the Creator of the Universe, fortify your soul and strengthen your resolve to live a better life that is in tune with your faith and principles.

9. End your day on a good note

Shakespeare once wrote a play entitled “All’s well that ends well.” That’s good advice for dealing with depression too. End a day that may have been riddled with challenges and frustrations by making Wudu before going to bed, thinking of God and the Prophet and counting every blessings you have

10. Stop Shaytan in his tracks

Shaytan is the source of many of our negative emotions. It’s his job to make us feel pessimistic and to despair of any good in life. When you feel these feelings coming on, stop him dead in his tracks: say Aoutho billahi minash Shaytan ir Rajeem (I seek refuge in Allah from the accursed satan).
I pray,Almighty will remove these pains from my heart,and make this post usefull for muslims brotehrs and sisters…

Ameen!

KING
slave of ALLAH SWT

Monday, January 18, 2010

Storm hits the highest tower of the world


Last night's storm hitting Burj Dubai (Khalifa) tower the highest in the word -
WHY WE NEED LIGHTNING ARRESTER ? ....KINDLY LOOK THE PICTURE AND SEE HOW THE LIGHTNING ARRESTER SAVE THE TOWER.
It's all happening in Dubai....spectacular photos of last night's storm...
When lightning hit the world's tallest tower! For as long as half hour lightning hit the tower and the thunder sounded all over the neighboring areas !
An unforgettable night!