Tuesday, June 23, 2009

உடல் எடை குறைய/அதிகரிக்க எளிய குறிப்புகள்:

உடல் எடை குறைய எளிய குறிப்புகள்:
* விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.
* இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.
* எலுமிச்ச பழ சாற்றில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும்.
* உடல் பருமன் குறைய, உணவில் கொள்ளு சேர்க்க வேண்டும்.
* பப்பாளியை சமைத்து சாப்பிட்டு வர, தடித்த உடம்பு குறையும்.
* வாழை தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, உடல் பெருக்கம் குறையும்; உடல் அழகு பெறும்.
* முருங்கைப் பூக்களை, பசும்பாலில் போட்டு காய்ச்சி, 41 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடல் கட்டமைப்பு பெறும்.

உடல் எடை அதிகரிக்க:
* பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர, உடல் எடை அதிகரிக்கும்.
* சாம்பல் பூசணிக்காயை, மூன்று மாதம், தொடர்ந்து உண்டு வர, இளைத்த உடல் பெருகும்.
* நாள்தோறும் இரவு சாப்பிட்டு உறங்க செல்வதற்கு முன், உலர்த்தி பொடி செய்த நெல் லிக்காய் தூளைப் பாலில் கலந்து குடித்து வந்தால், 40 நாட்களில், சதை பிடிப்பு கூடுதலாகும்.
* உடல் மெலிவாக இருப்பவர்கள், எள் ளால் தயாரிக்கப்படும் தின்பண்டங் களை சாப்பிட்டு வர, சதை பிடிக்கும்.
* தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும்.
* உடல் பருத்தவர்கள் அரிசி சாதத்தை குறைத்துக் கொண்டு, கோதுமையை சாப்பிடுவது நல்லது.
நன்றி http://eegarai.darkbb.com

2 comments: