ஆய்வு உதவித்தொகைகள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகை
(அ) முனைவர்பட்ட ஆய்வு உதவித்தொகையின் கீழ் மாதந்தோறும் ரூ.12,000/- இரண்டு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். இதரச் செலவினங்களுக்காக ஆண்டுதோறும் ரூ.12,000/- அளிக்கப்படும்.
(ஆ) விண்ணப்பிப்பவர் ஏதாவது ஒரு நிறுவனத்திலோ பல்கலைக்கழகத்திலோ முனைவர் பட்ட ஆய்விற்காகப் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான சான்று விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும்.
(இ) மொழி, மொழியியல், மானிடவியல், சமூகவியல், கல்வியியல், இசையியல், நிகழ்த்துகலைகள், வழக்காற்றியல், கட்டடவியல், கல்வெட்டியல், மெய்ப்பொருளியல் போன்ற ஏதாவது ஒரு துறையில் முதுகலைப் பட்டத் தேர்ச்சி (முதல் வகுப்பில் அல்லது உயர் இரண்டாம் வகுப்பில்) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்ட வகுப்பையும் பழங்குடி வகுப்பையும் சார்ந்த மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் தளர்த்தப்படும்.
(ஈ) தமிழ் இலக்கிய, இலக்கண மரபுகள், ஒப்பிலக்கியம், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு, உலக மொழிக் குடும்பங்கள், மொழி பெயர்ப்பு போன்ற துறைகளில் பண்டைக்காலத் தமிழோடு தொடர்புபடுத்தி ஆய்வுசெய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
(உ) விண்ணப்பிப்பவர் 10.06.2010 அன்று 30 வயதைக் கடந்திருக்கக் கூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு ஐந்து ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.
(ஊ) எழுத்துத்தேர்வின் மூலமும் அதைத் தொடர்ந்து தக்க வல்லுநர் குழுவைக் கொண்டு நடத்தப்படும் நேர்முகத் தேர்வின் மூலமும் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
(எ) பிறந்த தேதி, சாதி, கல்வித்தகுதி, முனைவர் பட்ட ஆய்வுக்கான பதிவு ஆகியவற்றிற்கான சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்பப்படவேண்டும். முழுமையான வடிவிலின்றி அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டா.
(ஏ) விண்ணப்பப் படிவங்களை நிறுவனத்தின் இணையத்தளத்திலிருந்து (www.cict.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது நிறுவனத்திலிருந்து நேரடியாகவும் அஞ்சல் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் 10-06-2010 க்குள் கீழ்க்காணும் முகவரிக்கு வந்துசேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
இயக்குநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
பாலாறு இல்லம், 6, காமராசர் சாலை
சேப்பாக்கம், சென்னை - 600 005

No comments:
Post a Comment