காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக் கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தானே?
இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும்.அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்
“இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும்,
இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்.
அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.”[திருக்குர்ஆன் 9:17,18,19]
“தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனை யும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்..
அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது.
அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.”[திருக்குர் ஆன் 9:107,108,109]
மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும். முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.
No comments:
Post a Comment