Sunday, March 27, 2011

நோயாளிகள்!!!!!! பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ்‏


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை. இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும்வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும். இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகிறான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


ஆயிஷா(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களை விடக் கடுமையாக நோய்வாய்ப்பட்ட வேறெவரையும் நான் கண்டதில்லை. இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுக் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ‘தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிறீர்களே (இறைத்தூதர் அவர்களே!), தங்களுக்கு இதனால் இரண்டு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதாலா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பதிலாக, மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து விடுவியுங்கள் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார். நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். என்னை உடல் நலம் விசாரிக்க நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்தே என்னிடம் வந்தார்கள். அப்போது நான் மயக்கம் அடைந்திருக்கக் கண்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அங்கசுத்தி (உளூ) செய்துவிட்டு அங்கசுத்தி செய்த தண்ணீரை என் மீது ஊற்றினார்கள். உடனே நான் மயக்கம் தெளிந்(து கண் விழித்)தேன். அங்கே (என் முன்னே) நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் செல்வத்தை நான் என்ன செய்ய வேண்டும்? என் செல்வத்தில் விஷயத்தில் என்ன முடிவு செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் எனக்கு பதிலேதும் கூறவில்லை. இறுதியில் வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான இறைவசனம் அருளப்பட்டது.


அதாஉ இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) கூறினார். இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்; (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.எனவே நமக்கு நோய் வந்தால் இறைவனிடமே துவா செய்வோம் !!!!!!!1 ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாம் அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர்.

அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடைய...ில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள். இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, 'ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். 'இல்லை' என உபைதுல்லாஹ் பதிலளித்தார். 'அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். அப்போது ஆயிஷா(ரலி) 'அவர் இளகிய மனதுடையவர். நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அ...வரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்" என்றார்கள். ஆயிஷா(ரலி) தாம் கூறியதைத் திரும்பவும் கூறினார்கள். 'அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ பக்ரிடம் ஒருவர் வந்து (சொன்னார்). நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது அபூ பக்ர்(ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூ பக்ர்(ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபுபக்ர்(ரலி) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்...தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களை அபூ பக்ர்(ரலி) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். 'அப்படியே இருங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களையும் மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர் .

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவர்களின் மனைவியரில் ஒருவர் அபிஸினியாவில் தாம் பார்த்த மாரியா எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார்.

அப்போது (ஏற்கெனவே) அபிஸினியா சென்றிருந்த உம்மு ஸலமா(ரலி) உ...ம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களையும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி(ஸல்) அவர்கள், 'அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால் அவரின் கப்ரின் மீது பள்ளிவாயில் எழுப்பி அதில் அவரின் உருவப்படங்களை வரைந்து வைப்பார்கள்; அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள் இவர்களே!" என்று கூறினார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்து கொண்டிருந்த ஒரு யூதச் சிறுவன் திடீரென நோயுற்றான். எனவே, அவனை நோய் விசாரிக்க நபி(ஸல்) அவர்கள் அவனிடம் வந்து, அவனுடைய தலை மாட்டில் அமர்ந்து, 'இஸ்லாதை ஏற்றுக் கொள்!' என்றார்கள்.... உடனே அவன் தன்னருகிலிருந்த தந்தையைப் பார்த்தான். அப்போது அவர், 'அபுல் காஸிம் (நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்குக் கட்டுப்படு" என்றதும் அவன் இஸ்லாத்தை ஏற்றான். உடனே நபி(ஸல்) அவர்கள், 'இவனை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே சகல புகழும்" எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் வீட்டில் என்னுடைய முறைக்குரிய நாளில் (வந்திருந்த போது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அல்லாஹ் என்னுடைய எச்சிலையும் அவர்களின் எச்சிலையும் ஒன்று சேர...்த்திருந்தான். (எப்படியெனில்) நபி(ஸல்) அவர்கள் (கடுமையான நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் - மிஸ்வாக் - குச்சியைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக இருந்தார்கள். எனவே, நான் அந்தக் குச்சியை எடுத்துமென்று பிறகு அதனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கி விட்டேன்

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஃபாத்திமா(ரலி) (நோய் வாய்ப்பட்டிருந்த தம் தந்தை) நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள். அவர்களின் நடை, நபி(ஸல்) அவர்களின் நடையைப் போன்றிருந்தது. அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'வருக! என் மகளே!" என்று அழைத்து தம் வலப்பக்...கம்... அல்லது இடப்பக்கம்... அமர்த்தினார்கள். பிறகு, அவர்களிடம் இரகசியமாக ஏதோ ஒரு விஷயத்தைக் கூறினார்கள். அதைக் கேட்டதும் ஃபாத்திமா(ரலி) அழுதார்கள். நான் அவர்களிடம், 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். மீண்டும் நபி(ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்" என்று ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் இரகசியத்தை நான் பரப்பமாட்டேன்" என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை (ஃபாத்திமா ஒன்றும் கூறவில்லை. நபி - ஸல் அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக் கேட்டேன்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தம் கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் எந்த நோயில் ...இறந்தார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்களின் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி(ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார் நபி(ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்ட...ாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதித்கிறேன்' என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், 'தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது' என வந்துள்ளது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' அல்லாஹ் கூறினான்: நான் என் அடியானை, அவனுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருட்களை(ப் பறித்து)க் கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். ('அவன...ுடைய பிரியத்திற்குரிய இரண்டு பொருள்கள்' என்பது) அவரின் இரண்டு கண்களைக் குறிக்கும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார் (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) நோயாளிக்கும், இறந்தவரை எண்ணி வருந்துபவருக்கும் 'தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'தல்பீனா நோயாளியின் உள்...ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன்' என்பார்கள்.

No comments:

Post a Comment