Friday, April 29, 2011

செய்தித் துளிகள்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,
1. முறையாக தூங்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள், சுறுசுறுப்பாக செயல்படுவர் என, அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிந்தது.அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, "ஸ்ரீ இன்டர்நேஷ்னல்' என்ற நிறுவனம், பிறந்த குழந்தைகளுக்கான ஆய்வில் ஈடுபட்டது. இந்நிறுவனம், எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், முறையாக தூங்கும் பழக்கம் கொண்ட குழந்தைகள் சுறுசுறுப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது.ஆய்வின் தலைவர் எரிகா டெய்லர் கூறியதாவது:ஒன்பது மாத குழந்தைகள் முதல் நான்கு வயது வரை உள்ள குழந்தைகள், இந்த ஆய்விற்கு தேர்வு செய்யப்பட்டன. அவற்றின் நடவடிக்கைகள், தூங்கும் விவரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.தினமும் இரவு சீக்கிரமே தூங்கும் குழந்தைகள், நாள் ஒன்றுக்கு 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள் சொல்வதை விரைவாக புரிந்து கொள்கின்றன. மொழிகளை விரைவாகவும் கற்று கொள்கின்றனர். அவர்கள், கணித பாடத்தில் நன்றாக செயல்படுவதாகவும் கண்டறிந்தோம்.அதேநேரம், குறைவாக தூங்கும் குழந்தைகள் சுறுசுறுப்பின்றி செயல்படுகின்றன. குழந்தைகள் தூங்குவதற்கு முன் கதைகள் சொல்வது, அவர்களுடன் உரையாடுவது உள்ளிட்டவைகள், அவர்களை தூங்க வைப்பதற்கு பயனுள்ளதாக அமையும்.


2. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு பதிந்து கொள்ளுங்கள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உடன் மாணவர்களின் தனி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை வேலை வாய்ப்பிற்கு அந்தந்த பள்ளிகளியே பதிந்து கொள்ளலாம். தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி பள்ளி மாணவர்கள் இதுவரை பதியாதவர்கள் பதிவு செய்ய வேண்டும் தமிழகத்தில் உள்ள தனியார், மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள் ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவு செய்வார்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளின் பெயரை வேலை வாய்ப் பிற்கு பதியுமாறு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும். மேலும் 10ம் வகுப்பில் வேலை வாய்ப் பிற்கு பதிந்தவர்கள் தங்கள் வேலை வாய்ப்பு அட்டை, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை பள்ளி முதல் வரிடம் வழங்க வேண்டும்.

3. புகை பிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானவர்களையோ, திருமணம் செய்ய மாட்டோம்' என்று மாணவியரும், "தங்களது மகள்களுக்கு, போதைக்கு அடிமையானவர்களை, திருமணம் செய்து வைக்க மாட்டோம்' என பெற்றோரும் உறுதி எடுத்து கொண்டனர். இதே போல் தமிழக மாணவிகளும், பெற்றோர்களும்உறுதி எடுக்க வேண்டும்.கேரள மாநிலம் கண்ணூரில், கண்ணூர் மலபார் புற்றுநோய் தடுப்பு மையத்தில், புகையிலை எதிர்ப்பு தினவிழா நடந்தது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த, திரளான மாணவியரும், அவர்களது பெற்றோரும், கலந்து கொண்டனர். புகைபிடிப்பவர்களையோ, புகையிலைக்கு அடிமையானர்களையோ, திருமணம் செய்து கொள்ள மாட்டோமென மாணவியரும், போதைக்கு அடிமையானவர்களுக்கு, தங்கள் மகள்களை, திருமணம் செய்து கொடுக்க மாட்டோமென, பெற்றோரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.கேரள மாநிலத்தில் தான் சிகரெட், பீடி போன்றவை அதிகளவு விற்பனையாகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.


4. சர்க்கரை நோயாளிகளுக்கு வலியின்றி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும்'' என சர்க்கரை நோய் நிபுணர் தெரிவிக்கிறார்கள். தர்மகிருஷ்ணமராஜா பேசியதாவது: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்படும் நரம்பு பாதிப்புகளால் மாரடைப்பு வந்தாலும் வலி தெரியாது. வலி இல்லாததால் சிகிச்சைக்கு உடனடியாக வராமல் உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. 75 சதவீத சர்க்கரை நோயாளிகளின் உயிரிழப்புக்கு இருதய பாதிப்புகளே முக்கிய காரணம். உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி சீராக வைத்திருந்தால், பின் விளைவுகளை தடுக்க முடியும். சரியான உணவு முறை, உடற்பயிற்சி, நடைபயிற்சி, முறையான சிகிச்சை உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும், என்றார். கருத்தரங்கில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தச் சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனைகள் இலவசமாக செய்து, இலவச மருந்து, சத்துணவு வழங்கப்பட்டது.
5. பிளிச்சிங் பவுடர் கண் ணில் விழுந்ததால் தொழிலாளியின் கண் பார்வை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தில் 900 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர் முருகன். இவர், உப்பார்பட்டி ஊராட்சி குடிநீர் தொட்டியில் குடிநீர் திறந்து விடும் வேலை செய்து வந்தார். குடிநீரில் பிளிச்சிங் பவுடர் கலந்து குளோரினேசன் செய்வதற்காக பிளிச்சிங் பவுடர் மூடையை திறந் தார். அப்போது பிளிச்சிங் பவுடர் அவரது இரண்டு கண்ணிலும் விழுந்தது. உடனடியாக குடிநீர் ஆய்வாளர் முருகானந்தம் அவரை தேனியில் உள்ள கண் ஆஸ்பத்தியில் சேர்த் தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூன்று நாள் கழித்தே பார்வை குறித்து தெரிவிக்க முடியும் என்றனர்.

No comments:

Post a Comment