Tuesday, August 31, 2010

காரைக்காலில் நடந்த கொடுமை பள்ளிவாசல் கட்ட போலி தெய்வங்களுக்கு பூஜை:




காரைக்காலில் ஹில்ரு பள்ளிவாசல் கட்டுவதற்கான துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தாடியும் தொப்பியும் வைத்துக் கொண்டு இந்து மதத்தைப் பின்பற்றி பூஜை செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் பள்ளிவாசல் சிறப்பாகக் கட்ட பூமிக்கு பூஜை செய்தால் நல்லபடியாக முடியும் என்று நம்பும் இவர்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? பேசாமல் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டியது தானே?

இஸ்லாத்தின் பெயரை ஏன் கெடுக்க வேண்டும்.காரைக்கால் மக்களுக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தால் இது போன்ற முர்தத்களை பள்ளிவாசல் நிர்வாகத்தில் இருந்து நீக்க வேண்டும். இது அவர்கள் மீதுள்ள மார்க்கக் கடமையாகும்.அல்லாஹ்வின் பள்ளியை யார் நிர்வாகிக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்

“இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும்,

இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும்.

அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும். ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.[திருக்குர்ஆன் 9:17,18,19]

“தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் ''நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனை யும் நாடவில்லை'' என்று சத்தியம் செய்கின்றனர். ''அவர்கள் பொய்யர்களே'' என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்..

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக் கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்கு வதற்குத் தகுதியானது.

அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.[திருக்குர் ஆன் 9:107,108,109]

மேற்கண்ட வசனங்களின் அடிப்படையில் இவர்கள் பள்ளியை நிர்வாகம் செய்ய தகுதியற்றவர்களாகி விட்டனர். இவர்களைத் தூக்கி எறிவது காரைக்காலைச் சேர்ந்த ஒவ்வொரு முஸ்லிமின் மார்க்கக் கடமையாகும். முடியாவிட்டால் இதைப் பள்ளிவாசலாக அங்கீகரித்து உதவிகள் செய்வதை உடனே நிறுத்த வேண்டும். ஏனெனில் இது போல் இணை வைப்பின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டவை பள்ளிவாசலே அல்ல என்று அல்லாஹ் மேற்கண்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகிறான்.

Monday, August 30, 2010

Saturday, August 21, 2010

அல்லாஹுக்கு விருப்பமான இரு வார்த்தைகள்!

இரு வார்த்தைகள் ரஹ்மானுக்கு விருப்பமானது, நாவுக்கு இலகுவானது, தராசில் கனமானது (அவ்விரு வார்த்தை)
ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி, ஸுப்ஹானல்லாஹில் அழீம்’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி )
பொருள்:
கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனை போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்

Tuesday, August 17, 2010

ஜகாத் யாருக்கு கொடுக்கலாம் ?

அஸ்ஸலாமு அழைக்கும்

ஜகாத் யாருக்கு கொடுக்கலாம் ?
உதாரணம் எனது நெருங்கிய உறவினர் மிகவும் கஷ்ட நிலையில் இருந்தால் அவருக்கு கொடுக்கலாமா (i .e . sisters , brothers ) தெரிந்தவர்கள் விளக்கவும் ?
*(ஜகாத் எனும்) தானங்கள் யாசிப்பவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.* அல்-குர்ஆண் 9 ;60
*மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் உங்களின் உறவினர் ஏழைகளாகவோ, கடன் பட்டவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு வழங்கலாம். உங்களுக்கு இரண்டு கூலி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ். * *1 ஜகாத் வழங்கியதற்காக. 2 உறவினர்களை அரவனைத்ததற்காக. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.*

Thanks to tamilmuslimgroups

Tuesday, August 10, 2010

Ramadan-Kareem


நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி)(அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)