Monday, December 27, 2010

யுக முடிவு நாளின் அடையாளங்கள்

மகளின் தயவில் தாய் :

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50

*பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்*

'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டார்கள். நூல்: புகாரி 50

*குடிசைகள் கோபுரமாகும்*

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர். இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். நூல் : புகாரி 7121

*விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்*

யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

*தகுதியற்றவர்களிடம் பொறுப்பு*

'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று விடையளித்தார்கள். நூல் : புகாரி 59, 6496

*பாலை வனம் சோலை வனமாகும்*

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும் கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது நூல் : முஸ்லிம் 1681

*காலம் சுருங்குதல்*

காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று) ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.

(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம். நூல் : திர்மிதீ 2254)

*கொலைகள் பெருகுதல்*

கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

*நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்*

பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர். நூல்: புகாரி 1036, 7121

*பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது*

மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016, 12079, 12925, 13509.

*நெருக்கமான கடை வீதிகள்*

கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: அஹ்மத் 10306.

*பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்*

பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

*ஆடை அணிந்தும் நிர்வாணம்*

ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல் தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும். நூல் : முஸ்லிம் 3971, 5098

*உயிரற்ற பொருட்கள் பேசுவது*

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 11365

*பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்*

தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர்கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: அஹ்மத் 1511

*தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்*

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்*

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். நூல்: ஹாகிம் 4/493

*சாவதற்கு ஆசைப்படுதல்*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.நூல்: புகாரி 7115, 7121

*இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்*

ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி. நூல்: புகாரி 3609, 7121

*முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்*

'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319

*யூதர்களுடன் மாபெரும் யுத்தம்*

யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின்னால் யூதன் ஒருவன் ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.நூல்: புகாரி 2926

*கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்*

கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.நூல் : புகாரி 5179

*யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்*

யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 7119

*கஹ்தான் இன மன்னரின் ஆட்சி*

(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால் மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 3517, 7117

*அல்ஜஹ்ஜாஹ் மன்னர்*

ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5183

*எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்*

கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப் பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி. நூல் : முஸ்லிம் 5191

*செல்வம் பெருகும்*

செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி. நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக் கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி. நூல் : புகாரி 1424

*மாபெரும் யுத்தம்*

இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

*பைத்துல் முகத்தஸ் வெற்றி*

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4.நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில் திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6.மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம். அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள். நூல் : புகாரி 3176

*மதீனா தூய்மையடைதல்*

துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம் தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 2451

*அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை*

யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம் இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 3546

*மாபெரும் பத்து அடையாளங்கள்*

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி), நூல்: முஸ்லிம் 5162.

*புகை மூட்டம்*

வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக! அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும். (அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான். அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி. மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி) நூல்: தப்ரானி

*யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை*

இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள். (அல்குர்ஆன் 21:96)

*ஈஸா(அலை) அவர்களின் வருகை*

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்
கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும். (அல்குர்ஆன் 43:61)

*மூன்று பூகம்பங்கள்*

(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை
யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

*பெரு நெருப்பு*

எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி) நூல்: முஸ்லிம்.

நன்றி : இஸ்லாம் தமிழில்


Sunday, December 26, 2010

வீடியோவில் பெண்கள் போஸ்கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை


வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா!இதோ பார்!சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார்.

ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும்.இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா?
சாதிசமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகிதங்கியிருக்கும்

அரபு நாட்டின் அறைகளில் தான்.தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோகாட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரிஉரையாடல்களும்

மார்க்கப் பணிகளுக்காகவும்,மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள்.
இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை.
வீடியோவில் பெண்கள் போஸ்கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக்கொள்ளக் கூடாது.

எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காகமாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்குநிகழ்ந்தவை?

என்றுகேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும்அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டிநிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா?


வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்றபுராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா

நுழைந்து டீ காப்பி சப்ளை,டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்றவரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கிவிட்டுத் தான் வெளியேறும்.கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத ல்காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல்அல்லது தர்ஹா சென்று திருமண ஒப்பந்தம் முடியும்வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.மணமகன் இல்லத்தி ருந்து துவங்கி, வீதி வீதியாகச்சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லதுமண்டபத்திற்குச்

அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத்தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து,

வந்தவிருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக்கொண்டிருக்கின்றான்.

பற்றாக்குறைக்கு அவனுக்குப்பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள்வேறு!

ஆனால்இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றனஎன்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத ல்கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்கவிருந்தாகின்றனர்.

வர்ணனையுடன் ரசித்துப்பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர்.

இவ்வாறு பார்வைகளில் படரவும்தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகைசெய்கின்றன.

அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்துவிடுகின்றான்.
பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ணஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமரவைக்கப்பட்டிருக்கும்

இந்த மணப்பெண்ணை நோக்கித்தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.

அனைவர்மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்தகேமராமேனின் பார்வையும் வளைத்துநிற்கின்றது.

இதில் மிகமிக வேதனைக்குரியவிஷயமும் வெட்கக்கேடான விஷயமும்என்னவென்றால்
இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப்பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பதுதான்.

என்ற (24:31)வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள்தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்துஅதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758

அதில்ஆயிஷா (ர லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப்பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.

இன்று வீடியோவுக்குப்போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?

ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம்சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல்
ஒரு போலித்தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும்

மற்ற சமுதாயமக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர்முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோகாட்சியளிப்பது

வெறுப்பிற்குரிய காரியமாகவேகருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன்வேலையைக் காட்டும் போது

ஒரு முஸ் லிமிடத்தில்இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 9

இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்)வர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்றுஎச்சரிக்கை செய்கின்றார்கள்.

அவற்றைக் கொண்டுமக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொருசாரார் பெண்கள் ஆவர்.
இவர்கள் ஆடை அணிந்தும்நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டுஆண்களை வளைத்துப் போடுவார்கள்.

அவர்களின்தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று கொண்டை போடப்பட்டு) இருக்கும்.
எவ்வளவோதொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன்
வாடையைக் கூட நுகரமாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் 3971

இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில்பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவைமட்டும் பாவம்

செய்யவில்லை. அந்த வீடியோகேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால்பார்க்கப்படுகின்றதோ
அப்போதெல்லாம் பாவம்பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள்

இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வைஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்)அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

''
ஸஅத் பின் உபாதா (ர லி)அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்)அவர்களை எட்டிய போது,
''ஸஅதின் ரோஷத்தைக்கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விடஅதிக ரோஷமுள்ளவன்.

அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன்.
அல்லாஹ் தன்ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையானமற்றும் மறைவான மானக்கேடான
செயல்கள்அனைத்தையும் தடை செய்து விட்டான்.
(திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதைமிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விடவேறெவரும் இல்லை.

அதனால் தான் நற்செய்திசொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும்அல்லாஹ் அனுப்பி வைத்தான்.

அல்லாஹ்வை விடமிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை.
அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின்ஷுஅபா (ர லி), நூல்: புகாரி 6846, 7416

ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும்தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான்.

இதுபோன்று தனது வீட்டுப்பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி,அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப்படைக்கின்றான்.

இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும்
திருமண உரை என்றபெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்திவிடுகின்றார்கள்.

தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்றுநோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்கவேண்டும்.

இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும்நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாகநமது சமுதாயத்தில் உள்ளது.

வீடியோ கேஸட்டாவது பிளேயரில்போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்தபோட்டோக்களோ ஆல்பங்களில்

சேகரிக்கப்பட்டுஅவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில்பார்வைக்கு வைக்கப்படுகின்றது.

அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை.
ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்துவைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர லி), நூல்: புகாரி 3322

மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்கவேண்டும்.

திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

Ahmed Kabeer Rifayi....Mohamed( AKR )

Saturday, December 25, 2010

கடல் எவ்வாறு இரண்டாக பிளந்தது விஞ்​ஞான ஆய்வு

S.M.அப்துல்லாஹ்

அல்லாஹ்வின் தூதர் மூஸா கடலை இரண்டாக பிளந்தார் என்று அல் குர்ஆன் மற்றும் பைபிள்
குறிபிடுகின்றது இந்த நிகழ்வை விஞ்​ஞான பூர்வமாக அளவீடுகளை கொண்டு ஆய்வுகளை
மேற்கொண்ட விஞ்​ஞான ஆய்வு நிறுவனமான National Center for Atmospheric Research
-NCAR மற்றும் அமெரிக்க பல்கலை கழகமான the University of Colorado ஆகியன இந்த
சம்பவம் விஞ்​ஞான பூர்வமா சாத்தியமானது என்று தெரிவித்துள்ளது இவற்றை கம்ப்யூட்டர்
கிராபிக் மூலம் விளக்கியுள்ளனர்.

இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு

மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு
பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த ஆய்வுக்கு மாற்று கருத்துகள்
இன்னும் வெளிவரவில்லை.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது,
ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு
அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன்
மூழ்க ஆரம்பித்ததும் அவன்; இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான்
கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்;
இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக
இருக்கின்றேன்” என்று கூறினான்.

இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும்
குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். எனினும் உனக்குப்
பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்.
நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக
இருக்கின்றனர்” அல் குர்ஆன் 10: 90,91,92

- Aaalima Masuda Beguam
--

என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

Saturday, December 18, 2010

Infatuation Vs Love!


Infatuation is the initial, instant attraction and intense desire for a person of the opposite sex.
Love is a friendship that has caught fire. It takes root, develops and grows one day at a time. The process is slow.
Infatuation lacks confidence. When he/she is away you wonder if he/she is cheating you. Sometimes you check perhaps even discreetly.

Love means trust. You are calm, secure and unthreatened. Your beloved feels the same also and this makes both even more trustworthy.
Infatuation is marked by a feeling of insecurity. You are excited and eager, but not genuinely happy. There are nagging doubts, unanswered questions or some unclear actions about your beloved that you would not like to examine too closely. It might spoil the dream.

Love is quiet understanding and mature acceptance of imperfection. It is real. It gives you strength and grows beyond you to bolster your beloved. You are warmed by his/her presence even when he/she is away. Miles of distance do not separate you. You want him/her nearer, but near or far, you know he/she is yours and you can wait.
Infatuation has an element of sexual excitement. If you are honest, you can admit it is difficult to be in one another's company, for the underlying fear that it will end in intimacy.

Love is the maturation of friendship. You are confident that you must be friends before you can be lovers.
Infatuation is usually temporary and eventually fades. It, however, might lead you to do things you will regret later, but love never will.

Love is an upper. It makes you look up. Love usually lasts longer and goes deeper than strong sexual Feelings. It makes you think up and makes you a better person.
Infatuation makes you feel anxious, nervous and jealous. You feel convinced that you can't live without the other person. You are unable to see the person for who they really are because he/she is perfect in your eyes.

Love makes you feel excited. You are willing to respect the other person's opinions and accept the good or bad qualities. You share similar values and beliefs and you see the person for who they really are.
Infatuation says, "We must get married right away! I can't risk losing you!"

Love says, "Be patient. Do not panic. Plan your future with confidence. There are rewards in waiting."

Friday, December 17, 2010

RAM/ROM நினைவகங்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் வாங்க


கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது.
கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன. ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட்கள் சாதாரண மாய்ப் பேசப்படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன.

RAM மெமரி குறித்து பார்க்கலாம் : கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன்பாடுகளில் உள்ளது. இவற்றில் RAMஎன்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிடவும், சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும், சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப்பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால்RAM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAMமெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப் படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம் களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயேRAM மெமரி இயங்குவதால் மின் சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும்.

நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல்களைக் கொண்டு இயக்க விரும்பினால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டிய திருக்கும்.

அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட, பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற்றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன.

அவை: SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMMஎனப்படும் Dual Inline Memory Module ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்ட ரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில் புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒன்று அல்லது இரண்டு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்கத் தேவையாய் உள்ளது.

இனி அடுத்ததான ROM மெமரி குறித்து பார்க்கலாம்: ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்ற முடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ, இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்குத் தயாராய் எப்போதும் இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும், சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்கப் பயன்படுத்தப் படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப் படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவ கங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப்படுத்தப் படுகின்றன.

உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.


Thanx to : http://www.dinamalar.com/

Saturday, December 11, 2010

யுகமுடிவு நாளிலே!!!

அல்லாஹ்வை விட்டும் தப்பித்துச் செல்ல போக்கில்லாத (கியாம) நாள் வருவதற்கு முன், உங்கள் இறைவனுடைய (ஏவலுக்கு) பதிலளியுங்கள் - அந்நாளில் உங்களுக்கு ஒதுங்குமிடம் எதுவும் இராது (உங்கள் பாவங்களை) நீங்கள் மறுக்கவும் முடியாது. (அல்குர் ஆன் 42:47)


(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும் வெளிப்படுத்தும். (அல்குர் ஆன் 10:54)

ஒவ்வோர் ஆத்மாவும் தனக்காக வாதாட முற்படும் அந்நாளில், ஒவ்வோர் ஆத்மாவும் அது செய்(து வந்)ததற்குரிய கூலி முழுமையாகக் கொடுக்கப்படும் அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர் ஆன் 16:111)

ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம். (அல்குர் ஆன் 18:47)

காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரபரப்பாக பரப்பி வைப்போம். (அல்குர் ஆன் 18:100)

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் நாள் அது குற்றவாளிகளை, (பயத்தினால்) நீலம் பூத்த கண்ணுடையோராக் நாம் அந்நாளில் ஒன்று சேர்ப்போம். (அல்குர் ஆன் 20:102)

ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர் ஆன் 23:101)

அந்நாளில் அர்ரஹ்மான் எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்து கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது. (அல்குர் ஆன் 20:109)

எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!) (அல்குர் ஆன் 21:104)

அந்நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பிணியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள்; மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்க காண்பீர்். (அல்குர் ஆன் 22:2)

அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். (அல்குர் ஆன் 24:24)

அந்நாளில் அநியாயக்காரன் தன்னிரு கைகளையும் கடித்துக்கொண்டு; "அத்தூதருடன் நானும் (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?" எனக் கூறுவான். (அல்குர் ஆன் 25:27)

"அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா." (அல்குர் ஆன் 26:88)

அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள். (அல்குர் ஆன் 30:14)

அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். (அல்குர் ஆன் 30:55)

அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) காரணங்கள் ஒரு பயனும் தராது, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது. (அல்குர் ஆன் 30:57)

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், "ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!" என்று கூறுவார்கள். (அல்குர் ஆன் 33:66)

(அந்நாளில்) அநியாயக்காரர்கள் தாங்கள் சம்பாதித்த (தீய)தைப் பற்றி பயந்து கொண்டிருப்பதை நீர் பார்ப்பீர். (அல்குர் ஆன் 42:22)

ஒரு நண்பன் மற்றொரு நண்பனுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நாள்; அன்றியும் (அந்நாளில்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர் ஆன் 44:41)

(அந்நாளில்) எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். (அல்குர் ஆன் 45:33)

அந்நாளில், உண்மையைக் கொண்டு ஒலிக்கும் பெரும் சப்தத்தை அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரித்தோர்) வெளியேறும் நாளாகும். (அல்குர் ஆன் 50:42)

அந்நாளில், அவர்களுடைய சூழ்ச்சிகள் எதுவும் அவர்களுக்குப் பயன் அளிக்காது, அன்றியும் (எவராலும்) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர் ஆன் 52:46)

உங்கள் உறவினரும், உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான், அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (அல்குர் ஆன் 60:3)

அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. (அல்குர் ஆன் 69:18)

அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள். (அல்குர் ஆன் 70:43)

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். (அல்குர் ஆன் 78:18)

அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும். (அல்குர் ஆன் 73:14)

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும். காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல. அந்நாளில் "(தப்பிக்க) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான். (அல்குர் ஆன் 74:9,3)

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும். அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும். (அல்குர் ஆன் 75:22,24)

அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். (அல்குர் ஆன் 89:23)

(அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். (அல்குர் ஆன் 50:31)
"எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

THANKS & REGARDS,
A.ABDUL RASHEED SAIT (ABU DHABI)

Thursday, December 9, 2010

நபி வழியில் அழகிய துஆக்கள்

தூங்குவதற்கு முன்

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி (மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)


தூங்கி விழித்தபின்

நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்

All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection


கழிவரையில் நுழைகின்றபோது

بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )

யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி, முஸ்லிம்
(In the name of Allah). O Allah, I take refuge with you from all evil and evil-doers.

கழிவரையிலிருந்து வெளியேறுகின்றபோது

غُفْـرانَك

உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
I ask You (Allah) for forgiveness.

உளுச் செய்யும்முன்

بِسْمِ الله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு

- In the name of Allah.


உளுச் செய்தபின்

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’


اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.
அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ

O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.

سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .

யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.

உண்ணும்முன், பருகும்முன்

بِسْمِ اللَّهِ

அல்லாஹ்வின் பெயரால்

- In the Name of Allah

اللَّهُمَّ بَارِكْ لَنا فِيهِ وَ اَطْعَمْنَا خَيْرًا مِنْه

அல்லாஹ்! அதில் எங்களுக்கு நீ அபிவிருத்தி செய்வாயாக! அதைவிடச் சிறந்ததை எங்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக! நூல்: திர்மிதி 5/506

O Allah! Bless us in it and provide us with better than it


பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

بِسْمِ اللَّهِ فِي اَوَّلِهِ وََآخِرهِ

அல்லாஹ்வின் பெயர் கொண்டு அதன் தொடக்கம் அதன் முடிவு நூல்கள்: அபூதாவூத் 3/347 திர்மிதி 4/288

In the Name of Allah, in the beginning and in the end


உணவு உண்டபின்

الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ

என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless

உணவளித்தவருக்காக

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم

யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615

O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them


اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي

அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126

O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink


வீட்டிலிருந்து புறப்படும்போது

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah


வீட்டினுள் நுழையும்போது

بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .

அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது

யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!

Oh Allah! Open for me the gates of Your mercy

பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது

யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்

O Allah! I am asking You to give me from Your Bounty


சபையை முடிக்கும்முன்

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: திர்மிதீ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: நஸயீ


துக்கம் கவலையின்போது

அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158


சங்கடம் நீங்க

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092