Thursday, December 9, 2010

நபி வழியில் அழகிய துஆக்கள்

தூங்குவதற்கு முன்

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

இறைவா உன் பெயரால் மரணிக்கிறேன், உன் பெயரால் உயிர் பெறுகிறேன். நூல்: புகாரி (மேற்கண்ட ஏதேனும் ஒன்றை கூறலாம்)


தூங்கி விழித்தபின்

நம்மை மரணிக்கச் செய்தபின் உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆதாரம்: முஸ்லிம்

All praise is for Allah who gave us life after having taken it from us and unto Him is the resurrection


கழிவரையில் நுழைகின்றபோது

بِسْمِ الله ) اللّهُـمَّ إِنِّـي أَعـوذُ بِـكَ مِـنَ الْخُـبْثِ وَالْخَبائِث )

யா அல்லாஹ்! ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி, முஸ்லிம்
(In the name of Allah). O Allah, I take refuge with you from all evil and evil-doers.

கழிவரையிலிருந்து வெளியேறுகின்றபோது

غُفْـرانَك

உன்னிடம் பாவம் பொருத்தருள வேண்டுகிறேன். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா
I ask You (Allah) for forgiveness.

உளுச் செய்யும்முன்

بِسْمِ الله

அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு

- In the name of Allah.


உளுச் செய்தபின்

أَشْهَدُ أَنْ لا إِلَـهَ إِلاّ اللهُ وَحْدَهُ لا شَريـكَ لَـهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمّـداً عَبْـدُهُ وَرَسـولُـه

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்)இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன். நூல்: முஸ்லிம்
I bear witness that none has the right to be worshipped except Allah, alone without partner, and I bear witness that Muhammad is His slave and Messenger.’


اللّهُـمَّ اجْعَلنـي مِنَ التَّـوّابينَ وَاجْعَـلْني مِنَ المتَطَهّـرين.
அல்லாஹ் பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக! நூல்: திர்மிதீ

O Allah, make me of those who return to You often in repentance and make me of those who remain clean and pure.

سُبْحـانَكَ اللّهُـمَّ وَبِحَمدِك أَشْهَـدُ أَنْ لا إِلهَ إِلاّ أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَـيْك .

யா அல்லாஹ்! உனது புகழைக்கொண்டு உன்னை துதிக்கின்றேன். உன்னிடம் பிழை பொருக்கத் தேடுகிறேன். உன்னிடமே தவ்பாவும் செய்கிறேன். நூல்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா
How perfect You are O Allah, and I praise You, I bear witness that none has the right to be worshipped except You, I seek Your forgiveness and turn in repentance to You.

உண்ணும்முன், பருகும்முன்

بِسْمِ اللَّهِ

அல்லாஹ்வின் பெயரால்

- In the Name of Allah

اللَّهُمَّ بَارِكْ لَنا فِيهِ وَ اَطْعَمْنَا خَيْرًا مِنْه

அல்லாஹ்! அதில் எங்களுக்கு நீ அபிவிருத்தி செய்வாயாக! அதைவிடச் சிறந்ததை எங்களுக்கு உண்ணக் கொடுப்பாயாக! நூல்: திர்மிதி 5/506

O Allah! Bless us in it and provide us with better than it


பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்

بِسْمِ اللَّهِ فِي اَوَّلِهِ وََآخِرهِ

அல்லாஹ்வின் பெயர் கொண்டு அதன் தொடக்கம் அதன் முடிவு நூல்கள்: அபூதாவூத் 3/347 திர்மிதி 4/288

In the Name of Allah, in the beginning and in the end


உணவு உண்டபின்

الْحَمدُ للَّهِ الَّذِي اطْعَمَنِي هَذَا ، وَرَزَقَنِيهِ ، مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ

என்னிலிருந்து என் முயற்சியின்றி என் பலமின்றி எனக்கு உண்ணக்கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகுக. நூல்கள்: திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா

Praise be to Allah who has given me this food, and sustained me with it, though I was unable to do it and powerless

உணவளித்தவருக்காக

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُم

யா அல்லாஹ்! அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத் செய்வாயாக! அவர்களுக்கு நீ பாவங்களை மன்னிப்பாயாக! அவர்களுக்கு அருளும் செய்வாயாக! நூல்: முஸ்லிம் 3/1615

O Allah! Bless them in what You have provided for them, and forgive them and have Mercy on them


اللَّهُمَّ اطْعِمَّ مَنْ اطْعَمَنِي وَاسْقِِِ ِ مَنْ سَقَانِي

அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு பருகக் கொடுத்தவருக்கும் நீ பருகக் கொடுப்பாயாக! நூல்: முஸ்லிம் 3/126

O Allah! Feed him who fed me and give him drink who gave me to drink


வீட்டிலிருந்து புறப்படும்போது

بِسْمِ اللهِ ، تَوَكَّلْـتُ عَلى اللهِ وَلا حَوْلَ وَلا قُـوَّةَ إِلاّ بِالله

அல்லாஹ்வின் பெயரால் அவன்மீது நம்பிக்கை வைத்துவிட்டேன்; மேலும் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையிலிருந்து விடுபடுவதும் அவனைக்கொண்டே இருக்கிறது. நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ

In the name of Allah, I place my trust in Allah, and there is no might nor power except with Allah


வீட்டினுள் நுழையும்போது

بِسْـمِ اللهِ وَلَجْنـا، وَبِسْـمِ اللهِ خَـرَجْنـا، وَعَلـى رَبِّنـا تَوَكّلْـنا .

அல்லாஹ்வின் பெயரால் நுழந்தோம்; அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே புறப்படுவோம்; நம்முடைய இரட்சகனின் மீது நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.
In the name of Allah we enter and in the name of Allah we leave, and upon our Lord we place our trust.

பள்ளிவாசலுக்குள் நுழையும்போது

யா அல்லாஹ்! உனது அருள் வாசல்களை எனக்காக திறப்பாயாக!

Oh Allah! Open for me the gates of Your mercy

பள்ளிவாசல் விட்டு வெளியேறும்போது

யா அல்லாஹ்! நிச்சயமாக உனது பேரருளை வேண்டுகிறேன். நூல்: முஸ்லிம்

O Allah! I am asking You to give me from Your Bounty


சபையை முடிக்கும்முன்

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறு யாருமில்லை. உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: திர்மிதீ

سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ

யா அல்லாஹ்! தூயவனாகிய உன்னை புகழ்கிறேன். உன்னிடமே பாவ மன்னிப்புத் தேடுகிறேன். உன்னிடமே மீள்கிறேன். நூல்: நஸயீ


துக்கம் கவலையின்போது

அல்லாஹ்! துக்கம் கவலை இயலாமை சோம்பல் கருமித்தனம் கோழைத்தனம் கடன் மிகைத்து விடுதல் ஆகியவற்றிலிருந்து உன்னைக்கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். நூல்: புகாரி7/158


சங்கடம் நீங்க

வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு) இல்லை, மகத்தானவன் சகிப்புத்தன்மையுடையவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. அர்ஷை உடையவன், வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு)இல்லை. (அவன்) வானங்களின் இரட்சகன், பூமியின் இரட்சகன். இன்னும் சங்கையான இரட்சகன். நூல்கள் புகாரி 7/154 முஸ்லிம் 4/2092



No comments:

Post a Comment