வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் ஆஹா!இதோ பார்!சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார்.
ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
அரபு நாட்டின் அறைகளில் தான்.தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோகாட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரிஉரையாடல்களும்
எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காகமாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்குநிகழ்ந்தவை?
என்றுகேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும்அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டிநிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா?
வீதியில் உலாவரும் வீடியோ கேமரா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்றபுராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா
நுழைந்து டீ காப்பி சப்ளை,டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்றவரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கிவிட்டுத் தான் வெளியேறும்.கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத ல்காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல்அல்லது தர்ஹா சென்று திருமண ஒப்பந்தம் முடியும்வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.மணமகன் இல்லத்தி ருந்து துவங்கி, வீதி வீதியாகச்சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லதுமண்டபத்திற்குச்
அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத்தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து,
பற்றாக்குறைக்கு அவனுக்குப்பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள்வேறு!
ஆனால்இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றனஎன்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத ல்கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்கவிருந்தாகின்றனர்.
வர்ணனையுடன் ரசித்துப்பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர்.
இவ்வாறு பார்வைகளில் படரவும்தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகைசெய்கின்றன.
இந்த மணப்பெண்ணை நோக்கித்தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
அனைவர்மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்தகேமராமேனின் பார்வையும் வளைத்துநிற்கின்றது.
இதில் மிகமிக வேதனைக்குரியவிஷயமும் வெட்கக்கேடான விஷயமும்என்னவென்றால்
இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப்பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பதுதான்.
என்ற (24:31)வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள்தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்துஅதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 4758
அதில்ஆயிஷா (ர லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப்பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
இன்று வீடியோவுக்குப்போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம்சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல்
ஒரு போலித்தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும்
மற்ற சமுதாயமக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர்முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோகாட்சியளிப்பது
வெறுப்பிற்குரிய காரியமாகவேகருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன்வேலையைக் காட்டும் போது
ஒரு முஸ் லிமிடத்தில்இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: புகாரி 9
இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்)வர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்றுஎச்சரிக்கை செய்கின்றார்கள்.
அவற்றைக் கொண்டுமக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொருசாரார் பெண்கள் ஆவர்.
இவர்கள் ஆடை அணிந்தும்நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டுஆண்களை வளைத்துப் போடுவார்கள்.
அவர்களின்தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று கொண்டை போடப்பட்டு) இருக்கும்.
எவ்வளவோதொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன்
வாடையைக் கூட நுகரமாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர லி), நூல்: முஸ் லிம் 3971
இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில்பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவைமட்டும் பாவம்
செய்யவில்லை. அந்த வீடியோகேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால்பார்க்கப்படுகின்றதோ
அப்போதெல்லாம் பாவம்பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.
ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வைஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்)அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
''
ஸஅத் பின் உபாதா (ர லி)அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்)அவர்களை எட்டிய போது,
''ஸஅதின் ரோஷத்தைக்கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா?அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விடஅதிக ரோஷமுள்ளவன்.
அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன்.
அல்லாஹ் தன்ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையானமற்றும் மறைவான மானக்கேடான
செயல்கள்அனைத்தையும் தடை செய்து விட்டான்.
(திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதைமிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விடவேறெவரும் இல்லை.
அதனால் தான் நற்செய்திசொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும்அல்லாஹ் அனுப்பி வைத்தான்.
அல்லாஹ்வை விடமிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை.
அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்''என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின்ஷுஅபா (ர லி), நூல்: புகாரி 6846, 7416
ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும்தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான்.
இதுபோன்று தனது வீட்டுப்பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி,அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப்படைக்கின்றான்.
தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்றுநோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்கவேண்டும்.
இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும்நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.
போட்டோக்கள் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாகநமது சமுதாயத்தில் உள்ளது.
வீடியோ கேஸட்டாவது பிளேயரில்போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்தபோட்டோக்களோ ஆல்பங்களில்
சேகரிக்கப்பட்டுஅவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில்பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர லி), நூல்: புகாரி 3322
மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.
இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்கவேண்டும்.
திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!
Ahmed Kabeer Rifayi....Mohamed( AKR )
very good news
ReplyDelete