Saturday, July 3, 2010

Message



கைபர் போர் நடந்தவருடம் நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். "ஸஹ்பா" எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும் படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும! ்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்" என ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி) அறிவித்தார்.
(பகுதி : 1,அத்தியாயம் : 4 , எண்: 215)

அல்லாஹ் கூறுகிறான்....அநியாயம் புரிந்தவன், தன்னிரு கைகளையும் கடித்திடும் நாளில் (உலகில்) இத்தூதருடன் நானும் (நேரான) ஒரு வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே? எனக் கூறுவான்.
(அத்தியாயம் : அல் ஃபுர்கான் - பிரித்தறிவித்தல், வசனம்: 27)

Narrated 'Aisha: When the last Verses of Surat-al-Baqara were revealed. Allah's Apostle went out and recited them in the Mosque and prohibited the trade of alcoholic liquors.

No comments:

Post a Comment