பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!)
*
*கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!*
*யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ்
எளிதாக்கிவிடுகிறான். (முஸ்லிம்)*
*சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!*
*“எவனொருவன் அல்லாஹ்வுக்காக பள்ளியொன்றை கட்டுகிறானோ, அவனுக்கு அதே போலொரு
வீட்டை அல்லாஹ் கட்டுகிறான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)*
*சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!*
*‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று
கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும்
(சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)*
*நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!*
*ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக
ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே
மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள்
அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம்
இருக்கும். (திர்மிதீ)*
*நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?*
*‘எவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்பதை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி
கூறுவாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விடும்’ என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)*
*மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!*
*மக்களை சுவனத்தில் சேர்ப்பதில் அதிகக் காரணமாக விளங்குவது எது? என நபி (ஸல்)
அவர்களிடம் வினவப்பட்டபோது ‘இறையச்சமும் நற்குணமும் தான்’ எனக் கூறினார்கள்’
(திர்மிதீ)*
*உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!*
*உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம்
சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.(புகாரி)*
*கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!*
*யார் கோபத்தை வெளிப்படுத்தும் சக்தியுள்ள நிலையில் அதை அடக்குகின்றாரோ அவரை
அல்லாஹ் மறுமையில் அனைத்துப் படைப்பினங்களுக்கும் மத்தியில் அழைத்து ஹூருல்
ஈன்களில் – சுவர்க்கத்து கண்ணழகிகளில் தாம் விரும்பியவரை
அனுபவித்துக்கொள்ளக்கூடிய உரிமையை வழங்குவான் (திர்மிதீ)*
*பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!*
*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
*இரண்டைப் பேணுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சுவர்க்கத்திற்கு
பொறுப்பேற்பார்கள்!*
*“எவர் தன் நாவையும், மருமஸ்தானத்தையும் பாதுகாப்பதாக எனக்கு
வாக்களிக்கின்றாரோ அவருக்கு நான் சுவனத்தைப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)*
*நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!*
*“நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள்
(ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்”
(புகாரி)*
*நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!*
*எவர் காலையில் நோன்பாளியாக, இன்னும் ஒரு நோயாளியை தரிசித்து, ஒரு ஜனாஸாவில்
கலந்து, ஒரு ஏழைக்கும் உணவளித்தால் (ஒரே நாளில் இவைகள் அமைந்து விடுமானால்)
அவர் சுவர்க்கம் நுழைந்து விட்டார்.*
*விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!*
*எவர் ஒழுச் செய்ததன் பின் ‘அஷ்ஹது அல்லா இலாஹ இல்ல ல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு
வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு’ அவருக்கு சுவனத்தின் எட்டு
வாயில்களும் திறக்கப்படும் அவர் விரும்பிய வாயில் ஊடாக சுவர்க்கம் நுழைவார்.*
*ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!*
*ஓர் உம்ரா செய்வது அடுத்த உம்ரா செய்யும் வரையிலான பவத்திற்குப் பரிகாரமாகும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. (முஸ்லிம்)*
*சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!*
No comments:
Post a Comment