Wednesday, September 29, 2010

குர்ஆன் வசனம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
படைத்தல், உணவளித்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் அல்லாஹ்வால் மாத்திரமே!
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே
பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா?
அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும்
உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 30:40)

*காலத்தை வீணடித்தவனின் பயனற்ற இறுதி நேர புலம்பல்!*
'இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!' (அல்குர்ஆன்: 23: 99-100)

*துன்ப நிலைக்குப் பிறகு வரும் நல்ல நிலமையில் அல்லாஹ்வை மறக்கும் மனிதன்!

பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்;
நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன"
என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில்
அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம். (அல்குர்ஆன்: 7:95)

*அல்லாஹ்விடத்தில் அழியாத வியாபாரமாகிய மூன்று செயல்கள்!
எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகின்றார்களோ, மேலும் தொழுகையை நிலைநாட்டுகின்றார்களோ, நாம் வழங்கியவற்றிலிருந்து மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் கொடுக்கின்றார்களோ அவர்கள் திண்ணமாக என்றைக்கும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள். அவர்களுக்குரிய நற்கூலியை அவன் முழுமையாகக் கொடுப்பான். இன்னும் தன் அருளிலிருந்தும் அவர்களுக்கு மிகுதப் படுத்துவான்.
நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனும் நன்றியை ஏற்றுக் கொள்ளுபவனுமாவான். (அல்குர்ஆன்:
35:29-30)

மறைவானவற்றின் அதிபதி அல்லாஹ்வே!
மறைவானவற்றின் சாவிகள் (அல்லாஹ்வாகிய) அவனிடமே இருக்கின்றன. அவற்(றிலுள்ளவற்)றை, அவனையன்றி வேறெவரும் அறியார். தரையிலும் கடலிலும், உள்ளவைகளையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் யாதொரு இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருளில் (புதைந்து) கிடக்கும். (கடுகு போன்ற சிறிய) வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்: 6:59)

No comments:

Post a Comment