Sunday, October 18, 2009

நாம் யார் ?


வழமையான வாழ்விற்காக இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள்...!
வறுமை என்ற சுனாமியால் அரபிக் கடல்ஓரம் ஒதிங்கிய நடை பிணங்கள்...!
வறுமை எனும் சூறாவளியில், இளமையை பறிகொடுத்த பறவைகள்..!
தொலைதூரத்தில் இருந்து போன்-ல் குடும்பம் நடத்தும் தொடர் கதைகள்...!

கடிதத்தை பிரித்த உடன் கண்ணிர்துளிகளால் காணல் நீராகிப்போகும் மணைவி எழுதியவைகள்...!
இன்டர்நெட்டில் இல்லறம் நடத்தும் இன்பம் துளைதவர்கள்...!
நலம் நலமறிய ஆவல் என்றால், பணம் பணமறிய ஆவல் என்று அறிந்தவகள்...!
எ/சி காற்றில் மணைவியின் சுவாச காற்றை சுவாசிக்க தவறியவர்கள்...!

குழந்தைகளை கொஞ்ச முடியாத மனசுமைகாரர்கள்...!
தனிமையில் உறங்கும்போது கண்ணீர்சிந்தி இளமையை துளைதவர்கள்...!
உழைப்பு என்ற வார்த்தையை உல் உணர்ந்தவர்கள்...!                   முடியும்வரை உழைத்து, உதிர்ந்தபின் வீடு திரும்பும் நோயாளிகள்...!
குடும்பத்திற்காக பாளைவனத்தில் கருகி, ஓலி கொடுக்கும் தியாகிகள்...! 

No comments:

Post a Comment