Friday, October 30, 2009

யாரும் தப்ப முடியாது?

*வானவருடன் ஓர் உரையாடல்* 

மரணம், ஒரு மனிதனின் படுக்கையறையின் கதவைத் தட்டியது. 

  “யாரது?” என்று தூங்கிக் கொண்டிருந்த அந்த மனிதன் உரத்தக்குரலில் 
கேட்டான். 

  “நான் தான் இஸ்ராயீல்; என்னை உள்ளே விடு” என்று வானவர் இஸ்ராயீல் 
(அலை) கதவிற்கப்பால் கூறினார்கள். 

  உடனே அந்த மனிதன் கடும் விஷக்காய்ச்சலால் கட்டுண்டவன் போல் நடுங்க 
ஆரம்பித்தான். அருகிலிருந்த தன் மனைவியிடம் கத்த ஆரம்பித்தான். 

  “என்னைக் காப்பாற்று. அந்த வானவரிடம் என் உயிரைப் பறிக்க விடாதே” 
என்று பேத்த ஆரம்பித்தான். 

  உயிரைப் பறிக்க வந்த வானவர் இஸ்ராயீலிடம் “நான் இன்னும் மரணத்திற்குத் தயாராகவில்லை; என் குடும்பம் என்னை நம்பியிருக்கிறது; எனக்கு சற்று அவகாசம் கொடு. சில காலம் என்னை விட்டு விடு” என்று கதறிக் கொண்டே இருந்தான். 

பெரும் சத்தத்துடன் கதவு தட்டப்பட்டது. “மனிதனே! நானாக வரவில்லை. எனக்கு உன் ஆத்மா தான் வேண்டும்” என்று இஸ்ராயீல் மீண்டும் கதவித் தட்டினார். 

  “மனிதனே! என்னை உள்ளே விடு! படுக்கையிலிருந்து எழு! நீ கதவைத் 
திறக்கா விட்டாலும் எனக்கு உள்ளே வரத்தெரியும்.” என்று உள்ளே அடி எடுத்து 
வைத்தார் இஸ்ராயீல். 

  அவரைக் கண்ட்தும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த மனிதன் கையில் 
துப்பாக்கியை எடுத்து நீட்டினான். 

  “உள்ளே வராதே! உன்னைச் சுட்டுவிடுவேன். உன்னைக் கொன்று விடுவேன்” 
என்று உள்ளே வந்து கொண்டிருந்த இஸ்ராயீலுக்கு முன்னால் துப்பாக்கியை 
நீட்டினான். 

 மனிதனை நோக்கிய வானவர், “அட மனிதனா! நானாக வரவில்லை. இறைவனின் கட்டளைப்படி நான் வந்திருக்கிறேன். உன்னுடைய கடைசிப் பயணத்திற்கு தயாராகு! 
மூடனே! எதற்குப் பயப்படுகிறாய். வானவர்களகிய எங்களுக்கு மரணமில்லை. 
துப்பாக்கியை மடக்கு. மேல் மூச்சு வாங்காதே! என்று வானவர் இஸ்ராயீல் தெளிவாகச் சொன்னவுடன் மனிதன் வெட்கத்தால் தலை குனிந்தான். 

  மனிதன் இப்பொழுது பரிதாபமான குரலில் கெஞ்சத் தொடங்கினான். “என் வாழ்நாளில் அல்லாஹ்வை நினைக்க நேரமில்லை. சூரியன் உதயமானதிலிருந்து இரவு வரை நான் பணம் சம்பாதிப்பதிலேயே நேரத்தைக் கழித்தேன். 

  “என்னுடைய ஆன்மவைப் பற்றி நினைக்கவே இல்லை. இறைவனின் கட்டளைக்கு அடிபணியவில்லை. ஐந்து வேளை தொழவுமில்லை. ஹஜ்ஜுக்குப் போக பணம் இருந்தும் பணத்தைச் செலவழிக்க மனமில்லாமல் ஹஜ்ஜுக்குப் போகவுமில்லை. யாருக்கும் தானதர்மம் செய்யவுமில்லை. வட்டி வாங்கித் தின்று கொண்டிருந்தேன். சில வேளைகளில் மது அருந்தினேன். தீய பெண்களுடன் தொடர்பு கொண்டேன். ரமலானில் நோன்பிருக்க வில்லை. 
வீணாக என் வாழ்நாளைக் கழித்து விட்டேன்.” 

  “வானவரே! எனக்கு ஒன்று அல்லது இரண்டாண்டுகள் தவணை கொடு. என்னை 
விட்டுவிடு. நீ எனக்கு கொஞ்சம் அவகாசம் அளித்தால் அதில் திருக்குரானின் 
கட்டளைகளைப் பேணிக் காப்பேன். இறைவனைத்துதித்து ஐவேளையும் தொழுவேன். ரமலான் மாத்த்தில் நோன்பு வைப்பேன். வட்டி வாங்கித் திண்ணமாட்டேன். ஆகாத பெண்களிடம் சேர மாட்டேன். ஓரிறைவனையே நான் துதிப்பேன்” என்று கதறிக் கதறி அழுது புலம்பினான். 

  வானவர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “மனிதனே! 
நாங்கள் வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைத் தான் செய்ய முடியும். இறைவனுக்கு மாறு செய்ய மாட்டோம். மரணம் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. மனிதனே! இதோ உன்னுடைய நேரம் வந்து விட்டது. நீ தயார்ஆகி விடு! உன்னுடைய அச்சம் எனக்குப் புரிகிறது! 
ஆனால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. அழுது புலம்பி பயனில்லை. 

  எத்துனை ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தாய்! நீ தாய் தந்தையை 
மதிக்கவில்லை. அவர்களை ஆதரவற்றவர்களாய் விட்டு விட்டு ஓடிவிட்டாய். மக்களை மார்க்க அடிப்படையில் போற்றி வளர்க்கவில்லை. மஸ்ஜிதில் தொழுகைக்குப் பாங்கு சொல்லும் போது நீ அசட்டையாக இருந்தாய்! திருக்குரானை நீ ஓதவுமில்லை. அதன் அறிவுரைகளை அறியவுமில்லை. வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதித்தாய். சூதாட்டமும், விபச்சாரமும் உன் பொழுது போக்குகள். சாப்பிட்டு சாப்பிட்டு உடலைக் கொழுக்கச் செய்தாய். நோயுற்ற மனிதர்களைப் பார்க்கவும் உனக்குப் பிடிக்காது. சிறிய தொகையைக் கூட நன்கொடையாக்க் கொடுத்த்தில்லை. ஏழைகளுக்கு உணவளிப்பது உனக்குப் 
பிடிக்காத விஷயம். நீயோ, நான் தான் அதிபுத்திசாலி, பராக்கிரமசாலி என்று பெருமித்த்தில் இருந்தாய். உனக்கு சொர்க்கத்தில் நுழையும் நற்பேறு உண்டா என்று எனக்குத் தெரியாது. நம்பிக்கை கொள்ளாதவர் நரகத்துக்குத் தான் செல்வர். உனக்கு இனி அவகாசமில்லை” என்று சொல்லிவிட்டுத் தன் கடமையைச் செய்தார் இஸ்ராயீல். 

நன்றி : ஒரு மாத இதழ். 

 
ஷம்சுத்தீன். 


اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ 
حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
 


”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! 
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” 



No comments:

Post a Comment